Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி கோவில்களை இடித்ததாக திமுக நிர்வாகி இசை பரப்பி வரும் போலி வீடியோ! உண்மையில் நடந்தது என்ன?

80 temples demolished in Modi's capital

பிரதமர் மோடி கோவில்களை இடித்ததாக திமுக நிர்வாகி இசை பரப்பி வரும் போலி வீடியோ! உண்மையில் நடந்தது என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2022 2:39 AM GMT

இந்தியாவை ஆட்சி செய்த மற்ற ஆட்சியாளர்களை விட பிரதமர் மோடி அதிக கோவில்களை இடித்ததாக கூறி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி இசை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பின்னணியில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர். உண்மையில் அந்த வீடியோ 2008ஆம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்டது. அப்போது மோடி குஜராத் மாநில முதல்வராக பதவியில் இருந்தார்.

அன்றைய காலகட்டதில் குஜராத் மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாநில அரசாங்கம் ஈடுபட்டது. அப்போது முறைகேடாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில்கள் சில இடிக்கப்பட்டன.


நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோவில்களுக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கையை அதிகாரிகள் தொடங்கினர். அதில் 80 கோவில்களும், அவற்றின் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

காந்திநகர் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் குழு இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். காந்திநகர் கலெக்டரேட் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 107 கோவில்கள், முக்கிய சாலைகளில் சட்டவிரோதமாக வந்துள்ளதாகவும், பல்வேறு பிரிவுகளின் உள்பகுதிகளில் சுமார் 312 கோவில்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஆதாரம்: https://timesofindia.indiatimes.com/india/80-temples-demolished-in-modis-capital/articleshow/3706244.cms

பாஜக இந்துத்துவ கட்சி என்று எதிர்கட்சிகள் விமர்சித்த போதிலும், முறைகேடு எங்கே நடந்தாலும் அவை களையப்படும் என்பதை குஜராத் அரசின் கோவில் இடிப்பு நடவடிக்கை வெளிக்காட்டியது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ள திமுக நிர்வாகி, மோடி ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்படுவதை போல சித்தரித்து பொய் செய்தி பரப்பி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News