ஆதார் கார்டு தொடர்பான மோசடிகளை தவிர்ப்பது எப்படி?
ஆதார் கார்டு தொடர்பான மோசடிகளை தவிர்ப்பது எப்படி?
By : Bharathi Latha
ஆதார் கார்டு என்பதை இந்தியாவில் தற்போது இன்றியமையாத சான்றிதழ்களில் ஒன்றாகிவிட்டது. நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமாக இருந்து வருகிறது. எனவே இத்தகைய தற்போது மோசடிகளும் அரங்கேறி வருகிறது. எனவே மோசடிகளில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். UIDAI-இன் பெங்களூரு பிரிவு, ஆதார் எண்களைப் பகிர வேண்டாம் என்று மக்களை எச்சரித்தது.
ஆதார் விவரங்களை பகிரும் பொழுது நான்கு எண்கள் மட்டும் கடைசியில் தெரியும் பின்னணி ஆதார் அட்டையை பயன்படுத்த மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. அதனை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆதார் மோசடிகள் இந்தியாவில் மிகவும் பொதுவானதாகி விட்டதால், ஆதாரைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பைச் சுற்றி ஒரு கலந்துரையாடல் சென்று கொண்டிருக்கிறது. எனவே அது எண்ணை பாதுகாப்பது மற்றும் எந்தெந்த இடங்களில் உங்கள் ஆதார் எண் பகிரப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
எனவே எந்த இடத்திலும் 12 இலக்க எண்கள் அடங்கிய ஆதார் அட்டையை நீங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. எனவே நீங்கள் பயன்படுத்த இருக்கும் தகவல்களில் வெறும் கடைசி நான்கு இலக்க எண் கொண்ட ஆதார் அட்டைகளை மட்டும் பயன்படுத்தினால் போதுமானதாக இருக்கும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது இதன் மூலமாக மோசடி போன்ற பல்வேறு சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.
Input & Image courtesy: News 18