Kathir News
Begin typing your search above and press return to search.

AIIMS அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்சிஜென் பற்றாக்குறையால் மூடல்-போலி செய்தி பரப்பும் CPIM.!

AIIMS அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்சிஜென் பற்றாக்குறையால் மூடல்-போலி செய்தி பரப்பும் CPIM.!
X

JananiBy : Janani

  |  25 April 2021 1:00 AM GMT

தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜென் பற்றாக்குறை கடுமையாக உள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்சிஜென் பற்றாக்குறையால் டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை மூடியதாக ஒரு செய்தி வலம்வருகின்றது. இந்த போலி செய்தியானது முதலில் CPIML தலைவர் கவிதா கிருஷ்ணன் அவர்களால் தொடங்கப்பட்டது.



கவிதா கிருஷ்ணனைத் தொடர்ந்து, பலர் டிவிட்டரில் இந்த இடுக்கைப் பதிவிடத் தொடங்கினர். கிட் ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜமும் இதை டிவிட்டரில் பகிர்ந்து பின்னர் அதனை நீக்கிவிட்டார்.




இந்த போலி செய்தியை உடனடியாக டெல்லி AIIMS மருத்துவமனை, தங்கள் நிர்வாகத்தில் ஆக்சிஜென்கு தட்டுப்பாடு என்று கூறி முறியடித்தது. NDTV யில் பேசிய AIIMS மருத்துவமனை இயக்குநர் Dr ரந்தீப் குலேரியா, AIIMS மருத்துவமனை நிறுவனத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வேறு பிரிவுகளில் எங்கும் ஆக்சிஜென் தட்டுப்பாடு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

அவசர வார்டில் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது, மேலும் சீரமைக்க வேண்டிய இடங்கள் சில உள்ளன என்று அவர் தெரிவித்தார். அவசர வார்டில் ஆக்சிஜென் தேவையைச் சரி செய்வதற்காக ஒரு மணி நேரம் புது நோயாளிகளை வரவேற்பதைத் தடைவிதித்தது. ஆனால் இதனால் வார்டு முழுமையாக அடைக்கப்பட்டதாகச் செய்தி பரவ தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


AIIMS மருத்துவமனையில் ஆக்சிஜென் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால், அது அவசர பிரிவில் அதிக நோயாளிகளைச் சேர்த்திருக்க மாட்டார்கள். நகரத்தில் மற்ற தனியார் மருத்துவமனைகள் போல் இல்லாமல், நிறுவனத்திற்குத் தேவையான ஆக்சிஜென் இருப்பு இருக்கின்றது.

எனவே AIIMS இயக்குநர் தெரிவித்ததில் இருந்து, இடதுசாரிகள் ஆக்சிஜென் பற்றாக்குறை என்று சமூக ஊடகத்தில் பரப்பும் செய்தி தவறானது என்பதை நிரூபித்தது.

source: https://www.opindia.com/2021/04/communists-spread-fake-news-that-aiims-closed-due-to-oxygen-shortage/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News