Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்கூல் படிக்கும் பையனுக்கு கூட வித்தியாசம் தெரியும் - பிரதமருக்கு எதிராக போட்டோஷாப் வேலையில் இறங்கிய பீட்டர் அல்போன்ஸ்..!

Annamalai question to Peter Alphonse who shared the picture of the Prime Minister

ஸ்கூல் படிக்கும் பையனுக்கு கூட வித்தியாசம் தெரியும் - பிரதமருக்கு எதிராக போட்டோஷாப் வேலையில் இறங்கிய பீட்டர் அல்போன்ஸ்..!

MuruganandhamBy : Muruganandham

  |  1 Oct 2021 3:57 AM GMT

மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தக் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இரவு சென்றார்.

அங்கு கட்டிடப் பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார். கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ''சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நமக்குத் தகுதியான அரசே நமக்கு கிடைக்கும்'' என்று பதிவிட்டிருந்தார். அத்துடன் பிரதமர் மோடியைப் புகைப்படம் எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு கேமராவை உயர்த்தியது போன்ற புகைப்படத்தை அவர் இணைத்திருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதன் உண்மைநிலை என்ன என்பதை அடுத்து வரும் படங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News