Kathir News
Begin typing your search above and press return to search.

முகத்தில் இரத்தம் சொட்டச் சொட்ட ஓடும் பெண்! லவ் ஜிகாத் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பகிரப்படும் வீடியோ!

Assault on a Muslim Girl by a Muslim Boy in West Bengal shared with false claim of Love Jihad

முகத்தில் இரத்தம் சொட்டச் சொட்ட ஓடும் பெண்! லவ் ஜிகாத் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பகிரப்படும் வீடியோ!

MuruganandhamBy : Muruganandham

  |  14 Dec 2021 6:01 PM GMT

மேற்கு வங்க மாநிலம் ஃபலகட்டாவில் தனது காதலை நிராகரித்ததால், தாக்கப்பட்டதாக பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. லவ் ஜிஹாத்துடன் தொடர்புபடுத்தி பகிரப்படுகிறது.

அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டா என்ற இடத்தில் ஒரு பெண் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக பயனர்கள் கூறுகின்றனர். மேலும், குற்றவாளி ஃபயஸ் அகமது கைது செய்யப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் உள்ளூர் கடைகளை சேதப்படுத்தியதாகவும், அவற்றை தீ வைத்து எரித்ததாகவும் கூறுகின்றனர்.

முகநூல் பதிவில் "ஃபலகட்டா கல்லூரியின் முஹம்மது ஃபயஸ் அகமது, ஒரு இந்து மாணவியைத் தாக்கி, அவரது முகத்தில் பிளேடால் வடுக்களை ஏற்படுத்த முயன்றார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது நண்பர்கள் கடைகளுக்கு தீ வைத்து நாசவேலையில் ஈடுபட்டனர்" என கூறப்பட்டுள்ளது.

உண்மைச் சரிபார்ப்பு-

30 நவம்பர் 2021 அன்று பெங்காலி நாளிதழான " ஆனந்தா பஜார் " வெளியிட்ட செய்தியில், ஃபஸாடின் ஹொசைன் என்ற இளைஞன் தனது வகுப்புத் தோழியைக் கத்தியால் குத்தி காயப்படுத்தினான். மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டா கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோச்பிஹார் மாவட்டத்தின் கோக்சதங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரா ஷோல்மாரியில் வசிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஃபஸாடின் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் போது பிடிபட்டு உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டார். பின்னர் அவரை உள்ளூர் மக்களிடம் இருந்து மீட்டு ஃபலகட்டா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்த சிறுமியும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவத்தில் எந்த மதவாத கோணமும் இல்லை என்று கூறினர் . காயமடைந்த சிறுமியும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட ஃபஸாதீனும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் லவ் ஜிகாத்துடன் தொடர்புபடுத்தி பரவி வரும் தகவல் போலியானது என்பது உறுதியாகிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News