BBMP படுக்கை மோசடிக்குப் பின்னர் பா.ஜ.க MP யை குற்றம்சாட்டப் போலி புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் காங்கிரஸ்!
By : Janani
BBMP படுக்கை மோசடி தொடர்பான வழக்கில் காங்கிரஸ் ஆதரவாளரைக் கைது செய்த ஒரு நாள் கழித்து, தற்போது பா.ஜ.க தலைவரும் மற்றும் பெங்களூரு தெற்கு MP தேஜஸ்வி சூர்யா மீது போலியான குற்றச்சாட்டை முன்வைக்கக் காங்கிரஸ் ஒரு போலி புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றது.
செவ்வாய்க்கிழமை அன்று பா.ஜ.க MP தேஜஸ்வி சூர்யா மற்றும் பா.ஜ.க MLA ரவி சுப்பிரமணியன் இருவரும் சிவில் அதிகாரிகள் மற்றும் தனியார் ஏஜென்ட்டுகளுக்கு இடையிலான படுக்கை ஒதுக்கீடு உறவை அம்பலப்படுத்தினர். இவர்களது குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பெங்களூரு காவல்துறை காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் நேத்ராவதி மற்றும் அவரது உறவினரைப் பணத்திற்காகச் சட்டவிரோதமாக கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை ஏற்பாடு செய்ததற்காகக் கைது செய்தனர்.
காவல்துறை நடவடிக்கைக்குப் பின்னர், குற்றவாளிகள் இருவரையும் சிவில் அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவமனையோடு தொடர்பில் இருந்ததற்காக கைது செய்தது
நோயாளிகளின் நிதி நிலையைப் பொறுத்து அவர்களிடம் இருந்து இருவரும் 20,000 முதல் 40,000 பணத்தைப் பெறுகின்றனர். தற்போது காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் படுக்கை மோசடியில் கைது செய்யப்பட்ட பின்னர், தற்போது அது சமூக ஊடகங்களைத் தவறான மற்றும் போலியான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றது. அவர்கள், கைது செய்யப்பட்ட பெண்மணி தேஜஸ்வி சூர்யாவுடன் தொடர்பில் இருப்பதாகக் குற்றம் சாட்ட முயன்றனர்.
இந்த மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தைக் கர்நாடக காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூட பகிர்ந்தது. ஆனால் உண்மையில் அந்த புகைப்படத்தில் தேஜஸ்வி சூர்யாவுக்கு அருகில் இருக்கும் அந்த பெண் வேறு ஒரு நபர் மற்றும் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் நேத்ராவதி இல்லை.
BBMP படுக்கை மோசடியைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நேத்ராவதி காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பல பேரணியில் கலந்து கொண்டுள்ளதாகப் பல அறிக்கைகள் கூறியது. பல புகைப்படங்கள் அவர் மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளருடன் உறுப்பினராக இருப்பதையும் காண்பித்தது.
இந்த BBMP படுக்கை மோசடி'வழக்கில் காங்கிரஸ் உறுப்பினர் தொடர்பு மாநிலத்தில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூரியா, பெங்களூரூவில் தேவைக்கு அதிகமாகப் படுக்கை வசதிகள் உள்ளன. இருப்பினும் ஊழியர்கள் படுக்கை இருப்புகளைப் போலியான புக்கிங் செய்து வருகின்றது. இந்த மோசடியில், BBMP அதிகாரிகள், ஆரோக்கிய மித்ரா மருத்துவமனை மற்றும் தனியார் ஏஜென்டுகள் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.
source: https://www.opindia.com/2021/05/congress-shares-morphed-image-to-allege-bjp-link-with-bbmp-bed-scam/