இந்த கொடுமைய பார்த்தீங்களா? எங்கு அடிதடி நடந்தாலும் "ஜெய் ஸ்ரீராம்" கோஷமிடச் சொன்னதாக போலி செய்தி பரப்பும் தேசவிரோத கும்பல்.!
The Uttar Pradesh Police also took to its official fact-check Twitter account to bust the fake news shared by the Bhim Army leader.

opindia
By : Muruganandham
தடியால் இளைஞர்களை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோவை, ஏஎஸ்பி சிம் குமார் சாவ்லா , பீம் ஆர்மி பாரத் ஏக்தா மிஷன் டெல்லி மாவட்டத் தலைவர் ஆகியோர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஆகஸ்ட்31அன்று 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடாததற்காக "ஆர்எஸ்எஸ் குண்டர்களால்" இளைஞர்கள் தாக்கப்படுவதாக வீடியோவில் கூறப்பட்டிருந்தது. மொரதாபாத் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு போலீஸ் பூத் முன் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீடியோ வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, மொராதாபாத் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ குறித்த உண்மையை சோதித்து வெளியிட்டது. சம்பந்தப்பட்ட வீடியோ ஹரியானாவின் யமுனாநகரைச் சேர்ந்தது என்பதை மொராதாபாத் போலீசார் உறுதி செய்தனர்.
பீம் ஆர்மி தலைவரால் பகிரப்பட்ட போலி செய்திகளை உத்திரப்பிரதேச காவல்துறை தனது அதிகாரப்பூர்வ உண்மையை சரிபார்க்கும் ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியது. இந்தி நாளிதழான ஜாக்ரான் வெளியிட்ட அறிக்கையின் இணைப்பைப் பகிர்ந்து, உபி காவல்துறை வைரல் வீடியோ உத்தரபிரதேசத்துடன் தொடர்புடையது அல்ல, தானா ஹமீதா, மாவட்டம் யமுனாநகர், ஹரியானாவுடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தியது.
உண்மைகளை திரித்ததற்காக சாவ்லா மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க மொரதாபாத் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று ஜாக்ரான் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த சம்பவம் ஆகஸ்ட் 12 அன்று நடந்தது. பாதிக்கப்பட்டவர், சஹில் அல்வி என அடையாளம் காணப்பட்டவர். அரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் இளைஞர்கள் குழுவால் தாக்கப்பட்டார். உண்மையில், அரியானா காவல்துறையும் அந்த குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்தது. அதே நாளில் ஜீ நியூஸ் போன்ற பிற ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்டன.
சாஹிலைத் தாக்கிய குழு எந்த குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்தது அல்ல என்று அறிக்கைகள் குறிப்பிட்டன. உண்மையான சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் போலி செய்தி வைரலாகத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
