Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு செல்போன் மாடலை புரிந்துகொள்ளும் அறிவு கூட இல்லையா? பா.ஜ.க-வினர் செய்த நிவாரண பணிகளை திரித்து பொய் செய்தி பரப்பும் தி.மு.க -வினர்!

தமிழக பாஜக பதிவிட்டது கேரளா நிவாரணப் புகைப்படங்களா ?

ஒரு செல்போன் மாடலை புரிந்துகொள்ளும் அறிவு கூட இல்லையா? பா.ஜ.க-வினர் செய்த நிவாரண பணிகளை திரித்து பொய் செய்தி பரப்பும் தி.மு.க -வினர்!

MuruganandhamBy : Muruganandham

  |  16 Nov 2021 2:34 AM GMT

நவம்பர் 8-ம் தேதி தமிழக பாஜகவின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், " மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது " என உணவு தயாரிப்பது மற்றும் வாகனத்தில் வைத்து வழங்கும் சில புகைப்படங்கள் வெளியாகியது. இதனை திரித்து வெளியிட்ட சில சமூக ஊடக பக்கங்கள், இவை கேரளாவில் கடந்த வருடம் எடுக்கப்பட்ட புகைப்படம் என போலி செய்தியை பரப்பி வந்தன.



புகைப்படத்தில் இருப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் போல் இருப்பதாகவும், புகைப்படத்தின் கீழே OPPO A9 2020 குறிப்பிட்டு உள்ளதால் அது கடந்த ஆண்டு கேரளாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். இதில் OPPO A9 2020 என்பது செல்போன் மாடலைக் குறிக்கிறது. செல்போன் மாடலை தவறாகப் புரிந்து கொண்டு பரப்பி வருகிறார்கள்.



இது குறித்து தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் கடந்த நவம்பர் 9ஆம் தேதியே விளக்கமளித்துவிட்ட நிலையில், இன்னும் தொடர்ச்சியாக அதே பதிவு, திமுக சார்பு முகநூல் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Next Story
கதிர் தொகுப்பு
Trending News