திரையில் சாதி ஒழிப்பு 'கருச்சட்டை மாறன்' - நிஜத்தில் 'ராக்கையா கவுன்டர்' என பெருமையாக பதிவேற்றம் - சூர்யா எனும் நடிகன்.!
திரையில் சாதி ஒழிப்பு 'கருச்சட்டை மாறன்' - நிஜத்தில் 'ராக்கையா கவுன்டர்' என பெருமையாக பதிவேற்றம் - சூர்யா எனும் நடிகன்.!
By : Mohan Raj
திரைப்படத்தில் வரும் வசனங்களுக்கும், நடைமுறை வாழ்க்கை முறைக்கும் சம்மந்தமில்லை தான். ஆனால் சில திரைப்பட கதாநாயகர்கள் தன்னை திரையுலகில் மட்டுமல்ல நிஜ உலகிலும் கதாநாயகனாக மனதில் நினைத்துக்கொண்டு பல கருத்துக்களை கூறி வருகிறனர்.
ஆனால் தன் குடும்ப வாழ்வில் அதனை பின்பற்றுவதில்லை மாறாக தான் கூறி நடிக்கும் கருத்துக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அந்த வகையில் தன்பொழுது திரையில் 'கருஞ்சட்டை மாறனாக' வலம் வரும் சூர்யா இணைந்துள்ளார்
சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் "சூரரைப் போற்று" படத்தில் ஒரு முக்கிய வசனம் வரும் அதில், "எனக்கு சமுதாயத்தில் உள்ள பொருளாதார தடையும், 'சாதி' தொடர்பான ஏற்றதாழ்வு தடையும் உடைய வேண்டும்" என வரும். இந்த வசனத்தை ஒரு கதாநாயகன் பேசுவதில் தவறேதும் இல்லை ஆனால் அது நடிகர் சூர்யா சிவக்குமார் பேசுவதுதான் போலியாக உள்ளது.
நடிகர் சூர்யா சிவக்குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாது திரை படங்கள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்கு இரண்டு பெயரில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
ஒன்று, "2D எண்டர்டெய்ண்ட்மெண்ட்" எனப்படும் நிறுவனம். மற்றொன்று, "ராக்கையா சினிமாஸ்" என இரண்டு பிரைவேட் லிமிட்டட் நிறுவனங்களை தனது பட தயாரிப்புக்களுக்காக நிர்வகித்து வருகிறார். இந்த இரண்டிலுமே நடிகர் சூர்யா'வின் பெயர் "ராக்கையா கவுன்டர் சிவக்குமார் சூர்யா" என ஆவணங்களில் பதியப்பட்டுள்ளது.
நிறுவனம் துவங்குவது அதில் படங்களை தயாரிப்பது தனிநபர் விருப்பம் அதில் ஏதும் குற்றமில்லை! ஆனால் "சாதிய ஏற்றதாழ்வுகளை களைய வேண்டும்" என பிழைப்பிற்காக திரையில் லேபிள் ஒட்டி முழக்கமிட்டு காசு சம்பாரித்து. திரை மறைவில் தனது சாதி சமூக பெயரான 'கவுன்டர்' பட்டத்தை ஆவணங்களில் போட்டுக்கொள்வது எவ்வித நியாயம்?
அப்படி சாதியை ஒழிக்க வேண்டுமாயின் தன் பெயரை சாதி இல்லாமல் பதிவேடுகளில் பதிந்து வைத்துவிட்டு பின் வந்து கூக்குரலிடலாம். ஏன் அவரின் பாட்டனார் பெயரை வெறுமனே 'ராக்கையா' என்று கூட ஆவணங்களில் எழுதலாம்.
அப்படி இல்லாமல் ஜம்பமாக திரைமறைவில் "ராக்கையா கவுன்டர் சிவக்குமார் சூர்யா" என போட்டுக்கொண்டு திரையில் "எனக்கு சாதி தடைகள் உடைய வேண்டும்" என அரிதாரம் பூசுவது ஈ.வே.ராமசாமி சாதியை ஒழித்தார் என்ற அரசியல் நாடக கூற்று போல் உள்ளது.
சூர்யா அவர்களே முதலில் மாறுங்கள்! பின் மாற்றுங்கள்.