Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு எதிராக பொய் செய்தி வெளியிட நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திற்கு கொடுக்கப்பட்ட அஜெண்டா - மீண்டும் மூக்குடைந்த சோகம்..!

Centre slams New York Times for its 'distorted' reportage alleging ICMR downplayed Covid threat for Modi's 'political goals'

இந்தியாவிற்கு எதிராக பொய் செய்தி வெளியிட நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திற்கு கொடுக்கப்பட்ட அஜெண்டா - மீண்டும் மூக்குடைந்த சோகம்..!
X

Image source: India Narrative

MuruganandhamBy : Muruganandham

  |  19 Sep 2021 3:05 AM GMT

நியூயார்க் டைம்ஸ் ஊடகம் இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து "ஆத்திரமூட்டும்" வகையிலும் "கவனத்தை ஈர்க்கும்" வகையிலும் கட்டுரையை வெளியிட்டதற்காக மத்திய அரசு கடுமையாக சாடியுள்ளது.

அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் இந்து விரோத கருத்துகளையும், மோடிக்கு எதிரான செய்திகளை மட்டுமே பெரும்பாலும் பதிவிட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருக்கும் நேரத்தில், இந்தியா திணறுவதாக செய்தி வெளியிட்டு வருகிறது.

வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா, இது இந்தியா நன்றாக செயல்பட்டு வரும் நேரத்தில் வெளியிடப்பட்ட ஆத்திரமூட்டும் கட்டுரையாகும். எங்கள் தடுப்பூசி திட்டம் சிறப்பாக உள்ளது. இது போன்ற செய்திகள் மக்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசுகையில், நாங்கள் பத்திரிகை மற்றும் தலையங்க சுதந்திரத்தை பெரிதும் மதிக்கிறோம். அதே நேரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம் என்பதையும், நமது அனைத்து ஆற்றல்களும் நேரமும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதையும் உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.





செப்டம்பர் 14, 2021 அன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில், இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் நிறுவனம் அதன் கண்டுபிடிப்புகளை பிரதமருக்கு ஏற்றவாறு வடிவமைத்தது என்று கூறி பெருந்தொற்று காலத்தில் மக்களை குழப்பும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தது.

நியூயார்க் டைம்ஸ் ஏற்கனவே இந்திய அரசாங்கத்தை குறிவைத்து தவறான தகவல்களையும் அப்பட்டமான பொய்களையும் பலமுறை பரப்பி பிடிபட்ட நிலையில், இந்த முறையும் அதேவாறே சிக்கியுள்ளது. உண்மையில், தி நியூயார்க் டைம்ஸ் மட்டுமல்ல, மற்றொரு முக்கிய மேற்கத்திய ஊடகமான 'வாஷிங்டன் போஸ்ட்' கடந்த காலத்தில் இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகளுக்கு எதிராக ஒரு ஸ்மியர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News