Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் போலியா? பகீர் தகவல்கள்!

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் போலியா? பகீர் தகவல்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2022 11:36 AM IST

ஒரு சில தமிழ் ஊடகங்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் என்ற பெயரில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடைய பின்னணி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதில், பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவந்துள்ளன.



வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் அப்படி ஒரு பெயரில் எந்த சங்கமும் பதிவாகவில்லை என பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து மத்திய சென்னை பதிவாளர் அலுவலகத்தில் கேட்கப்பட்டது. அங்கிருந்து வந்த தகவலில் உள்ளவற்றை அடுத்து காணலாம்.



2014 ஆம் ஆண்டே சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கலைக்கப்பட்டு விட்டதாகவும், ஆண்டறிக்கை கூட சமர்பிக்கப்படவில்லை என தெரிய வருகிறது. சங்க பதிவிலேயே முறைகேடு செய்துள்ள இவர்கள், தங்கள் சார்பு ஊடகங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மட்டும், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு ஒன்று கூடுகின்றனர். இதனை எல்லாம் வைத்து பார்த்தால், பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு சில ஊடகங்கள் குறித்து விமர்சனம் செய்தது நியமானது என்றே தெரிய வருகிறது.

இது குறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து இயங்கி வரும் அமைப்பினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News