Kathir News
Begin typing your search above and press return to search.

தேசியை கொடியை இறக்கி, காவி கொடி ஏற்றப்பட்டதா பள்ளியில்..? கர்நாடகாவில் குட்டையை கிளரும் காங்கிரஸ்

Congress, media lie about Tricolour being removed from college, Pakistan picks up propaganda

தேசியை கொடியை இறக்கி, காவி கொடி ஏற்றப்பட்டதா பள்ளியில்..? கர்நாடகாவில் குட்டையை கிளரும் காங்கிரஸ்
X

MuruganandhamBy : Muruganandham

  |  10 Feb 2022 12:45 AM GMT

பிப்ரவரி 8 அன்று, காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் பல ஊடக நிறுவனங்கள், கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில் மூவர்ணக் கொடி அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக காவி கொடி ஏற்றப்பட்டதாக வதந்தி பரப்பினர்.

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் "பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள சில தேச விரோதிகள் ஷிமோகாவில் உள்ள ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கியுள்ளனர். எதிர்ப்பின் அடையாளமாக தேசியக் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டார்.



சிறுவன் ஒருவன் காவிக்கொடி ஏற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், பெரும்பாலான மாணவர்கள் காவிக்கொடிகளை அசைப்பது படமாக்கப்பட்டது. டைம்ஸ் நவ்வின் சிறப்பு நிருபர் இம்ரான் கான் தவறான தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஷிமோகாவில் தேசியக் கொடிக்கு பதிலாக காவி கொடியை வைப்பது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும். மேலும் ஒரு வாரத்திற்கு கல்லூரியை மூட வேண்டும் என்றார்.

இதில் உண்மை என்னவென்றால், அது ஏற்கனவே காலியாக இருந்த கொடி கம்பமாகும். எந்த இடத்திலும், தேசியக்கொடி இல்லை.

இந்தியா டுடே, மிட் டே மற்றும் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்கள் இந்த சம்பவம் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டன.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News