Kathir News
Begin typing your search above and press return to search.

"பறையா"விற்கும், "பறையருக்கும்" வித்தியாசம் தெரியாத வன்னிஅரசு - வகுப்பெடுத்த அண்ணாமலை

பறையாவிற்கும், பறையருக்கும் வித்தியாசம் தெரியாத வன்னிஅரசு - வகுப்பெடுத்த அண்ணாமலை

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jun 2022 10:53 AM GMT

பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையாவில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தமது ட்விட்டர் பக்கத்தில், எச்சரிக்கை என்ற தலைப்பில், பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என கொதித்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூலாக விளக்கம் அளித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய 'pariah' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்!

நான் 'Pariah' எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள்

இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!

இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News