CoWINHELP செயலி மூலம் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்யலாமா? வைரல் செய்தி உண்மையா?
By : Janani
தற்போது வாட்ஸ் ஆப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வது குறித்து ஒரு போலி செய்தி வைரலாகி வருகின்றது. அந்த வைரல் செய்தியில் ஒரு தடுப்பூசி செலுத்திக் கொள்ள CoWIN ஹெல்ப் செயலியின் மூலம் பதிவு செய்யலாம். மேலும் அதற்கான ஒரு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பரவலாக சமூக வளைத்ததில் பரவி வந்த நிலையில், அரசாங்கம் அந்த செய்தியை மறுத்து தவறானது என்று ஒரு ட்விட்டை வெளியிட்டுள்ளது.
அந்த வைரல் செய்தியில் "ஒருவர் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய CoWIN ஹெல்ப் செயலி மூலம் செய்யலாம்," என்று குறிப்பிட்டிருந்தது. அரசாங்கத்தின் தகவல்கள் மற்றும் திட்டங்களைத் தவறாகப் பரப்புவது குறித்துக் கண்டறியும் உண்மை கண்டறியும் குழுவான PIB, "இந்த வைரல் செய்தி மற்றும் லிங்க் போலியானது," என்று கூறியது. மேலும் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய ஆரோக்கிய சேது அல்லது UMANG மூலம் பதிவு செய்யலாம் என்றும் அது குறிப்பிட்டது.
இந்த தடுப்பூசி இயக்கமானது ஜனவரி 16 யில் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக காவல்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டது. மார்ச் 1 இல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் 45 மேற்பட்டவர்களுக்குத் தொடங்கப்பட்டது.
மே 1 இல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்தத் தொடங்கப்பட்டது. இதுவரை 20,26,95,874 பேருக்கு நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
source: https://www.latestly.com/social-viral/fact-check/fake-message-on-covid-19-vaccination-registration-through-cowinhelp-app-goes-viral-pib-fact-check-debunks-whatsapp-post-2505823.html