Kathir News
Begin typing your search above and press return to search.

UPI பேமென்ட்களுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? - உண்மை என்ன?

டிஜிட்டல்பேமெண்ட்களுக்கான கட்டணத்தை விதிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தற்போதுவரை இல்லை.

UPI பேமென்ட்களுக்கு கட்டணம் விதிக்கப்படுமா? - உண்மை என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Aug 2022 10:03 AM GMT

கடந்த சில வாரங்களாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள, டிஜிட்டல் பேமென்ட் பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை அரசாங்கம் விதிக்க இருப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. மத்திய அரசு இதுதொடர்பாக கருத்துக் கணிப்பை கேட்டுள்ளதாகவும் பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட வண்ணம் இருந்தன.


ஆனால் அரசாங்கத்திடம் தற்போது இதைப்பற்றி கேட்ட போது, அரசாங்கம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதற்கான தெளிவான பதிலை கொடுத்துள்ளது.


மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து குறிப்பிடுகையில், "டிஜிட்டல் பேமென்ட்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசாங்கம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று கூறியது.


இதுபற்றி நிதியமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "UPI மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருந்து அனைத்து விதமான கட்டணத்தையும் செய்வதற்கு இது பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. எனவே இதற்கு கட்டணம் வசூலிப்பது அவர்களுடைய பல்வேறு நடவடிக்கைகளை பாதிக்கும் விதமாக அமையும் என்ற காரணத்தினால், இது பற்றி எந்த ஒரு முடிவையும் அரசாங்கம் தற்போது வரை எடுக்கப்படவில்லை. இது பற்றி ஊடகங்களில் சொல்லப்படும் ஒரு தகவலும் முற்றிலும் மறுப்பதற்கு உரியது" என்று கூறியுள்ளது.


ஆனால் இத்தகைய டிஜிட்டல் சேவைகளை வழங்கும் google, Paytm, Phonepay போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் காரணமாக, மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மூலமாக கட்டணம் வசூல் செய்வது இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று காரணத்தினால் அத்தகைய நிறுவனங்கள் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் தற்போது கோரிக்கை ஒன்று கொடுக்கபட்டுள்ளது. இதில் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து தங்களுடைய கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்று கூறியுள்ளது.

Input & Image courtesy:Indian Express news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News