Kathir News
Begin typing your search above and press return to search.

Fact Check : சமீபத்தில் நடந்த நக்சல் தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க தலைவர் கைதா? உண்மை என்ன?

Fact Check : சமீபத்தில் நடந்த நக்சல் தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க தலைவர் கைதா? உண்மை என்ன?
X

JananiBy : Janani

  |  10 April 2021 1:23 PM GMT

சமீபத்தில் நடந்த நக்சல் தாக்குதலின் போது 22 ஜவான்கள் சத்தீஸ்கரில் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தி நாளிதழான நவபாரத் வெளியிட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. வைரலாகி வரும் அந்த செய்தி அறிக்கையில் பா.ஜ.க தலைவருக்கு நக்சல் தாக்குதலில் தொடர்பு இருந்ததற்காக கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தி செய்தி அறிக்கையின் தலைப்பின் படி, "பிஜாப்பூரில் நக்சல் தாக்குதல்கள், 24 பேர் உயிரிழப்பு மற்றும் 31 பேர் படுகாயம் என்றும் கீழுள்ள தலைப்பில் பா.ஜ.க தலைவர் உட்பட இரண்டுபேர் கைது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை என்னவென்றால் இந்த செய்தி அறிக்கை மார்பிங் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று ஒரு செய்தி அறிக்கையை நவபாரத் வெளியிடவில்லை. இதே தலைப்பை நவபாரத்தில் தேடிய போது அதேபோன்று ஒரு தலைப்பு ஏப்ரல் 5 பதிப்பில் காணப்பட்டது. அந்த செய்தி அறிக்கை மற்றும் தலைப்பும் ஒன்றாக இருந்தாலும் அதன் துணை தலைப்பு மார்பிங் செய்யப்பட்டுள்ளது.



உண்மையான செய்தி அறிக்கையில் கொல்லப்பட்ட ஜவான்கள் 2,059 என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பரப்பப்பட்டு வரும் செய்தி அறிக்கையில் கூடுதலாக பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 2020 இல் நக்சலைட்டுடன் தொடர்பில் இருந்ததற்காக பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இது முன்பு நடந்த செய்தி. தற்போதைய நக்சல் தாக்குதலுடன் இது இணைக்கப்பட்டு தவறாக வலம்வருகின்றது. தற்போது மாவோயிஸ்ட் தாக்குதலுக்காக பா.ஜ.க தலைவர் கைது செய்யப்பட்டதாக எந்த செய்தி அறிக்கையையும் நவபாரத் வெளியிடவில்லை.

source: https://newsmeter.in/fact-check/fact-check-fake-news-claims-bjp-leader-arrested-in-connection-with-recent-naxal-attack-676665

Next Story
கதிர் தொகுப்பு
Trending News