FactCheck: மசூதி தகர்க்கப்பட்ட வைரல் புகைப்படம்- உண்மை என்ன?
தலிபான்களின் அட்டூழியம் தொடர்புடைய பல செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

அஷ்ரப் கானி தலைமையிலான அரசை கவிழ்த்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போதிருந்து, தலிபான்களின் அட்டூழியம் தொடர்புடைய பல செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அவர்கள் எந்தவிதமான காட்டுமிராண்டித்தனத்தையும் செய்யக்கூடியவர்கள் தான் என்பதால் அவை அனைத்தும் எளிதாக நம்பப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இவற்றை சரிபார்க்கும் நோக்கம், தலிபான் இவைகளை செய்ய மாட்டார்கள் என்பதல்ல. வேறு எங்கு இவை நடைபெற்றது என்ற விழிப்புணர்வு மட்டுமே.
தற்போது, பாகிஸ்தானில் தலிபான்கள் ஒரு மசூதியை தகர்த்ததாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதில், புகை வெளியேறி தீப்பற்றி எரிவது போல் இருக்கும் ஒரு உயரமான கட்டிடத்தை படம் உள்ளது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் ஒரே மாதிரியான நக்கல் தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. ஹிந்தியில், "पाकिस्तान में तालिबानियों की मदद से मस जिद्जिद अंतरिक्ष लांच लांच की बधाइयां रुकनी रुकनी रुकनी नहीं (" (தலிபானின் உதவியுடன் பாகிஸ்தானில் முதல் மசூதி விண்வெளியில் ஏவப்பட்டது, வாழ்த்துக்கள் நிறுத்தப்படக்கூடாது).
இது உண்மையா?
மசூதி இடிக்கப்பட்டது உண்மை. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஈராக்கின் மொசூல் மீது ISIS நடத்திய தாக்குதலின் வைரல் புகைப்படம் அது. 6 ஜூலை 2014ல் அன்று ஈராக்கின் மொசூல் மீது ISIS தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவித்தன. அந்த நேரத்தில் ISISஆல் அழிக்கப்பட்ட மற்ற கட்டிடங்களின் படங்களும் அந்த செய்திகளில் இருந்தன.
5 ஜூலை 2014 அன்று நினிவே மாகாணத்தின் வரலாற்று வடக்கு நகரமான மொசூலைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களை ISIS வெடிபொருட்கள் மற்றும் புல்டோசர்களைப் பயன்படுத்தி அழித்துவிட்டதாக அறிவித்தது.
டெய்லி மெயில் பத்திரிகை ஷியா அல்-குப்பா ஹுசைனியா மசூதி இடிப்பு வீடியோவை தங்கள் செய்தி அறிக்கையுடன் பகிர்ந்து கொண்டது. எனவே, ஈராக்கின் மொசூலின் அல் குபா ஹுசைனியா மசூதியின் பழைய புகைப்படம் பாகிஸ்தானில் தலிபான்கள் மசூதியை இடித்ததாக ஒரு தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.
Cover Image Courtesy: HuffingtonPost