Fact Check : பாரத் பையோடெக்கின் 'கோவாக்ஸினை' WHO அங்கீகரிக்கவில்லையா? வைரல் செய்தி உண்மையா?
By : Janani
சமூக வலைத்தளத்தில் தற்போது ஒரு வைரல் செய்தியாக, "கோவாக்ஸின்" தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை என்று ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
கோவாக்ஸின் தடுப்பூசி WHO வால் அங்கீகரிக்கப் படவில்லை என்பதால், அதனை இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளமுடியாது என்று அந்த வைரல் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி பல ஊடக பயனாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆனால் உண்மையில் கோவாக்ஸின் மூன்றாம் கட்ட சோதனை முடிவு முன்னரே செலுத்தப்பட்டது. WHO அதனை அங்கீகரிப்பதற்கான நிலையில் உள்ளது. மேலும் பாரத் பையோடெக் அதன் தடுப்பூசி செயல்திறன் 81 சதவீதம் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு செய்த நியூஸ்மீட்டர், ELU WHO விடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஒழுங்குமுறைக்கான ஒப்புதல் ஜூன்-செப்டம்பர் 2021 இல் வழங்கப்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகின்றது என்று பாரத் பையோடெக் ட்விட்டில் தெரிவித்திருந்தது.
எனவே WHO கோவாக்ஸின்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பது தவறான செய்தியாகும். அது ஒப்புதல் பெரும் நிலையில் இருக்கின்றது. கடந்த வாரம் WHO மக்கள் பயணம் செய்ய வேண்டிய அவசரக்கால பட்டியலில் தடுப்பூசி பெயர்களைத் தெரிவித்திருந்தது. அதில் கோவாக்ஸின் பெயர் இடம்பெறவில்லை என்பதால் மக்களிடையே இந்த வைரல் செய்தி அட்சதை ஏற்படுத்தியது.
எனவே இந்த வைரல் செய்தியில் கூறப்பட்டுள்ளது போன்று , கோவாக்ஸின் மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது என்பது உண்மை ஆனால் அது WHO அங்கீகரிக்கவில்லை என்பது தவறான செய்தியாகும். கோவாக்ஸின் இன்னும் அனுமதி பெறுவதற்கான நிலையில் உள்ளது.
Soure: நியூஸ் மீட்டர்