Kathir News
Begin typing your search above and press return to search.

FactCheck: தலிபான்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியதா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ?

UNSC, தலிபான்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக சில சமூக ஊடக பயனாளர்கள் செய்திகளை வைரலாகி வருகிறார்கள்.

FactCheck: தலிபான்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியதா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ?

Saffron MomBy : Saffron Mom

  |  2 Sep 2021 12:29 AM GMT

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய உள்ள தலிபான்கள் தாங்கள் கடந்த முறை போல அந்த அளவு கொடுங்கோல் ஆட்சி நடத்த மாட்டோம் என்று பத்திரிக்கை சந்திப்புகள் எல்லாம் நடத்தி தங்களுடைய 'இமேஜை' உலகளாவிய ரீதியில் மாற்றம் செய்ய பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

"தலிபான்கள் பத்திரிக்கை சந்திப்புகள் நடத்தி விட்டார்கள்" என்றும் ஒரு பத்திரிகையாளரை கொடூரமாக கொன்றதற்கு "ஒரு முறை மன்னிப்பு கேட்டார்கள்" என்ற ரீதியில் அவர்களுடைய குற்றங்களுக்கு வெள்ளை அடிக்கும் வேலையை மீடியாக்களும் ஜரூராக செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை (UNSC) தலிபான்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக சில சமூக ஊடக பயனாளர்கள் செய்திகளை வைரலாகி வருகிறார்கள். இப்படி வைரலான பதிவுகள், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தலிபான்களை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக கூறுகின்றன.





இது உண்மையா?

இல்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் பிரகாரம் தலிபான் இன்னும் ஒரு தீவிரவாத அமைப்பாக தான் கருதப்படுகிறது. 1999இல், கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒசாமா பின்லேடனுக்கு தலிபான்கள் புகலிடம் கொடுத்ததால் தலிபான்களின் மேல் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு, அவர்களுடைய நிதி மற்றும் நிதி மூலங்களும் முடக்கப்பட்டது.

2015 இல் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலைமையைப் பற்றி மிகுந்த கவலை தெரிவித்து. தலிபான்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை குறித்தும் கவலை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தடைப்பட்டியலில் இன்னும் பல தலிபான் தலைவர்களின் பெயர்கள் உள்ளது.

ஆகஸ்ட் 27ஆம் தேதி காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டுகள் வெடித்த பொழுது, UNSC வெளியிடப்பட்ட அறிக்கையில் தலிபான்களின் பெயர் இடம் பெறவில்லை. "ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கியத்துவத்தை பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் வழியுறுத்துவதாகவும், ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளை அச்சுறுத்தவோ, தாக்கவோ பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த செய்தி குறிப்பு கூறியது. இதுகுறித்து இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதிநிதியும் கேள்வி எழுப்பி இருந்தார்.



இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "தலிபான்களின் மீதான தடைகள் எந்த விதத்திலும் நீக்கப்படவில்லை என்றும், தலிபான்களை குறிப்பிடுகிற வாக்கியங்கள் மட்டுமே பத்திரிக்கை செய்தி குறிப்பில் இருந்து அகற்றப்பட்டு உள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.

எனவே சமீபத்திய பத்திரிக்கை செய்தி குறிப்பில் இருந்து தலிபான் என்ற வார்த்தை விடப்பட்டு இருந்தாலும் தீவிரவாத அமைப்பாகவும், பொருளாதாரத் தடைகள் பட்டியலிலும் தலிபான்கள் நீடிக்கிறது என்பது தெளிவாகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News