ஃபாஸ்டேக்கை ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக வீடியோ வெளியானது உண்மையா?
By : Thangavelu
சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில் ஸ்மார்ட் வாட்ச் அல்லது அது போன்ற சாதனத்தை பயன்படுத்தி பணத்தை சிறுவன் திருடப்படுவதாக வீடியோ வெளியாகியுள்ளது வாகன ஓட்டிகளிடம் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபாஸ்ட் டேக்கை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு சிறுவன் பணத்தை திருடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஏதேனும் சாத்தியக்கூறுகள் உள்ளனா என்று நிபுணர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகள் எளிதாக சுங்கச்சாவடியை கடப்பதற்காக, பணத்திற்கு பதிலாக ஃபாஸ்ட் டேக் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்டநேரம் காத்திருக்கும் நேரம் குறைந்தது. வாகன ஓட்டிகள் குறைந்த நேரத்தில் சுங்கச்சாவடியை கடந்து குறிப்பிட்ட சமயத்தில் இலக்கை எட்டி வருகின்றனர். இதனால் லாரிகள், கார்களில் ஃபாஸ்ட்டேக் பெயரில் ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருந்தது. கார் அல்லது லாரிகள் சுங்கச்சாவடிகளை கடக்கிறதோ அப்போது அந்த ஸ்டிக்கர் ஸ்கேன செய்யப்பட்டு தாமாகவே காரின் உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து உரிய கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஃபாஸ்ட் டேக் முறையில் தற்போது மோசடி நடைபெறுவது போன்று ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நெடுஞ்சாலையில் நிற்கின்ற ஒரு காரின் கண்ணாடியை அங்கிருக்கும் சிறுவன் துணியால் சுத்தம் செய்கிறான். அப்போது அவன் கையில் கட்டப்பட்டிருக்கும் வாட்சின் முகப்பு, ஸ்டிக்கரின் மேற்புறத்தில் படுமாறு கையை வளைத்துக் கொள்கிறான். இதனை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்த காரின் உரிமையாளர் இப்போது ஒரு கும்பல் ஃபாஸ்ட் டேக்கை ஸ்மார்ட் வாட்சால் ஸ்கேன் செய்து அதன் மூலம் பணத்தை திருடி வருகிறது எனக்குறிப்பிட்டிருந்தார். காரின் உள்ளே இருந்து பேசுவதால் சிறுவனுக்கு சத்தம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரை துடைத்த பின்னர் அச்சிறுவனிடம் கார் உரிமையாளர் பேசுகிறார். கையில் இருக்கும் வாட்ச் என்ன? அது ஸ்மார்ட் வாட்சா அப்படி கேட்கிறார். உடனே அச்சிறுவன் அங்கிருந்து ஓடிவிடுகிறான். இதனை அந்த கார் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அந்த கார் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஃபாஸ்ட் டேக்கில் மோசடி நடைபெறும் சம்பவம் சாத்தியமில்லாத ஒன்று எனவும் நிபுணர்கள் ட்விட்டர் மூலமாக கூறியுள்ளனர். இது போன்ற சம்பவம் நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை. எனவே பணம் திருடுவதாக வெளியான வீடியோவை பார்த்து பயப்பட வேண்டாம் எனவும் ஃபாஸ்ட்டேக் விளக்கம் அளித்துள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai