Kathir News
Begin typing your search above and press return to search.

விஷமத்தை கக்கும் youturn ஊடகம் - தலைப்பை திரித்து மக்களை மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விட முயற்சி!

விஷமத்தை கக்கும் youturn ஊடகம் - தலைப்பை திரித்து மக்களை மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விட முயற்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2022 4:50 AM GMT

அதிரடியாக எரிபொருள் வரியைக் குறைத்த அரசு.. உங்களுக்கு இல்ல, அம்பானிக்கு !

என்ற தலைப்பில் யூடர்ன் என்ற ஆன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த உடனே மத்திய அரசு அம்பானிக்கு மட்டுமே சலுகை செய்வது போலவும், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது போலவும் ஒரு தோற்றம் ஏற்படும். உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்த போது எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வந்தன. ஆகையால், இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஜூலை தொடக்கத்தில் விண்ட்ஃபால் வரியை மத்திய அரசு விதித்தது. அதாவது ஒரு துறை சார்ந்த நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக லாபம் ஈட்டினால் அதற்கு வரி விதிக்கப்படும். அதன்படியே இந்த வரி விதிப்பு கொண்டுவரப்பட்டது.

தற்போது சர்வதேச எண்ணெய் விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் விதிக்கப்பட்ட விண்ட்ஃபால் வரியை இந்திய அரசு குறைத்து உள்ளது. இதன் மூலம் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.2 மற்றும் பெட்ரோலுக்கு முழுமையாக ரூ.6 என வரியை நீக்கியது.

ஏற்கனவே ரிலையன்ஸ் பெட்ரோலிய தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதே போல நயாரா எனர்ஜி நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. அரசு வரி நீக்கியதால் இவற்றின் பங்குகள் உயர்ந்தன. ஆனால் யூடர்ன் ஊடகம் அம்பானிக்கு மட்டும் சலுகை செய்வது போல தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது மக்களை மத்திய அரசுக்கு எதிராக திசை திருப்பும் ஒருதலை பட்சமான ரிப்போர்ட்டிங் ஆகும்.

Input From: PIB



Next Story
கதிர் தொகுப்பு
Trending News