Kathir News
Begin typing your search above and press return to search.

Fact Check: இந்திய ராணுவ வீரர்கள் 'சரணடைந்த' புகைப்படங்கள்- சீனப் பிரச்சாரமா?

ட்விட்டர் மூலம் சீனப் பிரச்சாரத்தை நெட்டிசன்கள் விரைவாக முறியடித்தனர்.

Fact Check: இந்திய ராணுவ வீரர்கள் சரணடைந்த புகைப்படங்கள்- சீனப் பிரச்சாரமா?
X

Saffron MomBy : Saffron Mom

  |  8 Nov 2021 12:56 PM GMT

ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 7), சீன அரசு ஊடகம், கடந்த ஆண்டு ஜூன் 15 அன்று இந்தியப் படைகளுக்கும், சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் (PLA) இடையே நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் கையாளப்பட்ட (recreated) படங்களை வெளியிட்டது. சீன பத்திரிக்கையாளரால் வெளியிடப்பட்ட இப்படங்கள், ஆதிக்கம் செலுத்தும் சீனத் தரப்புக்கு முன்பாக இந்திய இராணுவம் முழுமையாக சரணடைவதைக் குறிக்கும் வகையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கின் (CGTN) இன்டர்நேஷனல் நியூஸ் எடிட்டர் ஷென் ஷிவே, ஒரு ட்வீட்டில், "கடந்த ஜூன் மாதம் நடந்த கால்வான் மோதலின் புதிய படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன, இது சீன PLA ஆல் கைப்பற்றப்பட்ட சரணடைந்த இந்திய வீரர்களைக் காட்டுகிறது." என்று கூறினார்.





ஆனால் ட்விட்டர் மூலம் சீனப் பிரச்சாரத்தை நெட்டிசன்கள் விரைவாக முறியடித்தனர். ஒரு Twitter பயனர் (@Rahhul_Kumar_) ஷென் ஷிவே வெளியிட்ட படங்களில் பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார். அவர் 6 விஷயங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார், இது படம் டிஜிட்டல் முறையில் சிதைக்கப்பட்டது என்று தெளிவாகக் காட்டுகிறது.



"அந்த சிப்பாயின் காலணியைப் பாருங்கள். அது நமது வீரர்கள் அணிவது போல் தெரியவில்லை. ஒரு INSAS கூட லோட் செய்யப்படவில்லை. ஜாக்கெட் மற்றும் பேன்ட் மற்ற வீரர்களுடன் பொருந்தவில்லை... கிட்டத்தட்ட ஒவ்வொரு சிப்பாய்களும் வெவ்வேறு வகையான ஜாக்கெட் அணிந்துள்ளனர்... ஒரு நடிகர்/சிப்பாய் ஸ்வெட்டர் அணிந்திருப்பதைக் காணலாம்..." என்று கூறுகிறார்.

மற்றொரு ட்விட்டர் பயனர், கைப்பற்றப்பட்ட இந்திய வீரர்கள் என்று அழைக்கப்படும் பலருக்கு நீண்ட முடி இருப்பதாக சுட்டிக்காட்டினார், ஆனால் உண்மையில், இந்திய இராணுவ வீரர்கள் நீண்ட முடியை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. "எனவே இப்போதெல்லாம் இந்திய ராணுவ வீரர்கள் நீண்ட முடியை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.



ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா கக்கரும் இந்தப் படங்களை 'மார்ஃபிங்' செய்யப்பட்டவை என்று மறுத்தார். அவர் ட்விட்டரில், "இவை போலியான மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்கள். இந்திய ராணுவ வீரர்களுக்கு நீண்ட முடி இருக்காது. இவர்கள் வீரர்கள் அல்ல, சீனா கிளிக் செய்த உள்ளூர்வாசிகள். கல்வானில் 111 பேர் பலியாகியிருப்பதை மறைத்துவிட வெளியிடப்பட்டுள்ளது. போலிப் படங்களின் தரத்தை மேம்படுத்துங்கள்" என்று கிண்டலடித்தார்.



மற்றொரு ட்விட்டர் பயனர், சீனப் படைகள் படங்களை மார்பிங் செய்ய ஒரு வருடம் எடுத்துக் கொண்டதா என்று விசாரித்தார். "ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்ய உங்களுக்கு ஒரு வருடம் பிடித்ததா? இந்திய வீரர்கள் சல்வார் கமீஸ் அணிவதில்லை அல்லது நீண்ட முடியுடன் இருப்பதில்லை. அடுத்த முறை சிறப்பாக முயற்சிக்கவும்" என்று முடித்தார்.

எனவே சீன ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள இத்தகைய 'சரணடையும்' புகைப்படங்கள் போலியானவை மற்றும் மார்பிங் செய்யப்பட்டவை எனப் பல ட்விட்டர் பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News