FactCheck: ஹாக்கி கேப்டன் மன்ப்ரீத் சிங் மத்திய அரசின் விருதை மறுத்தாரா?
ராகுல் காந்தியின் ரசிகர் பக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலி செய்திகளை பரப்ப முயன்றது.
By : Saffron Mom
ஆகஸ்ட் 8 (சனிக்கிழமையன்று), 'வித் RG' என்ற முகநூல் பக்கம் ஒரு சர்ச்சையைத் தூண்டியது. ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், புதிதாக இயற்றப்பட்ட விவசாயச் சட்டங்களை மத்திய அரசு பின்வாங்கும் வரை விருதுப் பணத்தை வாங்க மறுத்துவிட்டதாக அது 'தகவலைப்' பரப்பியது.
தன் முகநூல் பக்கத்தில், "ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், 3-கருப்பு விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை மோடி அரசாங்கத்திடமிருந்து விருதுப் பணத்தை ஏற்க மறுத்து விட்டார்." என பதிவு வெளியிட்டது. வெளியான ஒரு நாளிற்குள், இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. தற்பொழுது வரை அது 10,000 லைக்குகள், 895 கமெண்ட்கள் மற்றும் 1600 ஷேர்களைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் (RG) ரசிகர்களால் இந்தப் பக்கம் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவரின் அதிகாரப்பூர்வ பக்கம் அல்ல என்று இந்தப்பக்கம் தெளிவுபடுத்தியது. இந்த பேஸ்புக் பக்கம் 7.72 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
ஹாக்கி அணியின் கேப்டன் குறித்து அவர்கள் பரப்பிய 'செய்தி' உண்மையா?
ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி பதக்கம் பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் எந்த விருதையும் மன்பிரீத் சிங் மறுத்ததாக எந்த ஊடக செய்திகளும் இல்லை. ஹாக்கி ஒரு குழு விளையாட்டு என்பதால், சிங் தனது டீம் வீரர்களின் சம்மதம் இல்லாமல் சுயமாக முடிவெடுத்திருக்க முடியாது. மேலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு மத்திய அரசு இதுவரை எந்த விருதுகளையும் அறிவிக்கவில்லை. மாநில அரசுகள் மட்டுமே இதுவரை ரொக்கப் பரிசுகளையும் பிற சலுகைகளையும் அறிவித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூட ஹாக்கி அணிக்கு 1.25 கோடி பரிசாக அறிவித்தது. ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தன் தலைமைக்கு பாராட்டுதல்கள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சிங், "எனக்கும் குழுவினருக்கு முடிவில்லாத ஆதரவு மற்றும் உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா, தேசத்திற்கு அதிக விருதுகளை வழங்க கடினமாக உழைப்போம்! ஜெய் ஹிந்த்! "எனத் தெரிவித்தார். பாரதீய ஜனதாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் வாழ்த்து செய்திக்கும் அவர் "ஆதரவுக்கு மிக்க நன்றி" என்று பதிலளித்தார்.
வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை இந்தியா தோற்கடித்த பிறகு பிரதமர் மோடியும் மன்பிரீத் சிங்கை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்..
எனவே, ராகுல் காந்தியின் ரசிகர் பக்கம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போலி செய்திகளை பரப்ப முயன்றது தெளிவாகிறது.