Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் ஆதரவாளர்களை, சமூக ஆர்வலர்கள் போர்வையில் களமிறக்கும் மோசடி ! நாட்டில் அமைதியின்மையை உருவாக்க சதி !

How RTI query by a Congress supporter was used to spread misinformation by TOI

காங்கிரஸ் ஆதரவாளர்களை, சமூக ஆர்வலர்கள் போர்வையில் களமிறக்கும் மோசடி !  நாட்டில் அமைதியின்மையை உருவாக்க சதி !
X

How RTI query by a Congress supporter was used to spread misinformation by TOI

MuruganandhamBy : Muruganandham

  |  21 Sep 2021 6:36 AM GMT

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் "இந்து மதத்திற்கு அச்சுறுத்தல்கள்" என்ற தலைப்பில் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்து மதம் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

செய்தி அறிக்கை முதலில், செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸால் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு ஹிந்தி நாளிதழ் டைனிக் ஜாக்ரான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தாள் நேஷனல் ஹெரால்டு ஆகியவை வெளியிட்டன. இந்த செய்தி அறிக்கையை பகிர்ந்து, சமூக ஊடகங்களில், "இந்துக்கள் ஒருபோதும் பலியாக முடியாது" என பிரச்சாரம் செய்யப்பட்டது. ஊடகங்களில் வெளியான அந்த செய்தி அறிக்கையை உற்று நோக்கினால், அது தவறான தகவல் என்பதும், எதிர்கட்சிகளின் பிரச்சார வேலைகள் நிறைந்திருப்பதும் தெரியவருகிறது.

நாக்பூரைச் சேர்ந்த மோஹனிஷ் ஜபல்பூரே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விளக்கத்தைப்பற்றிக் கூறாமல், மோஹனிஷ் ஜபல்பூரேவின் சுயகருத்துகளை அடிப்படையாக கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் தனது RTI பதிலில் "கற்பனை" என்ற வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஊடகங்கள் அந்த கூற்றை ஆராயாமல் விமர்சன ரீதியாக தலைப்புகளில் வைத்துள்ளன. பல்வேறு குற்றங்கள் அல்லது பல்வேறு மதங்களுக்கு அச்சுறுத்தல்கள் என வகைப்படுத்தப்பட்ட தகவல்களை அமைச்சகம் பதிவு செய்யவில்லை என உள்துறை அமைச்சக அதிகாரி கூறியுள்ளார்.

அதாவது, இந்து மதம் எதிர்கொள்ளும் மிரட்டல்களுக்கான ஆதாரங்கள் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை. எனவே, இந்த ஆர்டிஐ பதிலில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது ஆச்சர்யமளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகேட்ட மோஹ்னிஷ் ஜபல்பூரே வெளிப்படையாக தன்னை காங்கிரஸ் ஆதரவாளராக வெளிகாட்டியுள்ளார். அரசியல் ஆதாயங்களுக்காக இந்து மதம் எதிர்கொள்ளும் மிரட்டல் குறித்த கேள்வியை கேட்டு, அந்த செய்தியை காங்கிரஸ் சார்பு ஊடகங்கள் மூலம் வைரலாக்கியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News