அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மாணவிகள் ரத்தம் சொட்ட நிற்கும் காட்சி வைரலானது.
ராம நவமி அன்று அசைவ உணவு வழங்கக்கூது என பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம் நடத்தியது. இதற்கு இடசாரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவேரி தங்கும் விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு சில புகைப்படங்கள் பகிரப்பட்டன.
இந்த விவகாரத்தில் அசைவம் சாப்பிட்டதால் தாக்கப்பட்டதாக கதறிய மாணவிகள், வேண்டும் என்றே கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.
கீழே உள்ள முதல் படத்தை பாருங்கள். நீல நிற ஆடை அணிந்த பெண் நல்ல நிலையில் உள்ளார். அருகில் உள்ள பெண்ணின் நெற்றியில் இருத்து ரத்தம் வருவது போல எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து இரண்டாவது படத்தை பாருங்கள். நெற்றியில் ரத்தம் வந்த பெண் எந்த கீறளும் இன்றி நல்ல நிலையில் உள்ளார். நீல நிற ஆடை அணிந்த பெண், படுகாயம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்த இரு மாணவிகளுமே இடதுசாரி அமைப்பின் தூண்டுதலின் பேரில் கலவரம் உண்டாக்க முயற்சி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.