கடந்த சில நாட்களாக, பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் அதானி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வெளியே விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்க வரிசையாக நிற்பதை போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சில ஊடக நிறுவனங்கள், விவசாயிகள் அரசு மண்டிகளுக்குச் செல்லாமல், அதானி குழுமத்திற்கு பயிர்களை விற்பனை செய்வதாகக் கூறி, அங்கு கோதுமை நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது என கூறின.
ஏபிபி சஞ்சா, தி கல்சா டிவி, தி பஞ்சாப் டிவி மற்றும் பிற ஊடகங்கள் விவசாயிகள் பயிர்களை அதானி குழுமத்திற்கு விற்பதாகக் கூறின. மறுபுறம், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ப்ரோ பஞ்சாப் டிவி போன்ற பிற ஊடக நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளுக்கு கவர்ச்சிகரமான தலைப்புகளைப் பயன்படுத்தின.
விவசாயிகள் போராட்டங்களின் போது விவசாயிகள் அதானி குழுமத்தை எதிர்த்ததாகவும், ஆனால் தற்போது கோதுமையை விற்க அதானி நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் ஏபிபி சஞ்சா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுர்.
சர்ச்சையின் பின்னணியில் உள்ள உண்மை
அதானி குழுமம் உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது என்ற கூற்று தவறானது. ஏனெனில் அதானியால் சேமிக்கப்படுவதாக கூறப்பட்ட தானியங்கள் உண்மையில் இந்திய உணவுக் கழகத்தால் வாங்கப்படுகின்றன. அதானி குழுமம் சிலாஸ்களை உருவாக்கியுள்ளது, FCI சிலாக்களை வாடகைக்கு எடுத்துள்ளது, மேலும் விவசாயிகள் கோதுமையை விற்கும் அதே செயல்முறையை பின்பற்றுகிறார்கள். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி 2007 ஆம் ஆண்டு முதல் இப்படி கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது .
அதானி அக்ரி லாஜிஸ்டிக் கீழ் வரும் கொள்முதல் மையம் 2 லட்சம் டன் கொள்ளளவு கொண்டவை. ஒவ்வொரு கோதுமை பருவத்திலும் சுமார் 90,000 டன் கோதுமை கிடைக்கும். நாங்கள் எஃப்சிஐக்கு சேமிப்பு இடத்தை அளித்து வருகிறோம், அதற்கு பதிலாக, அரசாங்கம் அதானி குழுமத்திற்கு வாடகை மற்றும் கையாளுதல் கட்டணத்தை செலுத்துகிறது. தானியங்கள் FCI ஆல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.