Kathir News
Begin typing your search above and press return to search.

எய்ம்ஸ் மருத்துவர்களின் பணியிடமாற்ற செய்தி - உண்மையை மூடி மறைக்கும் ஊடகங்கள் !

Media reports quoting Union Minister for Health and Family Welfare on mass transfers of doctors of AIIMS Delhi are incorrect and misleading

எய்ம்ஸ் மருத்துவர்களின் பணியிடமாற்ற செய்தி - உண்மையை மூடி மறைக்கும் ஊடகங்கள் !

MuruganandhamBy : Muruganandham

  |  28 Sep 2021 2:59 AM GMT

எய்ம்ஸ் மருத்துவமனையின் 66-வது நிறுவன தினத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஏராளமான மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறியதாக ஒரு சில ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒரே சீரான மருத்துவ சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இடமாற்ற கொள்கையை அரசு விரைவில் அமல்படுத்தும் என்றும் அந்த செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையின்படி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் புதிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சரை மேற்கோள் காட்டி பல்வேறு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ள தலைப்புச்செய்திகள் தவறாக வழிநடத்தும் உண்மைக்கு மாறான தகவல்கள் என்று தெளிவுபடுத்தப்படுகிறது. இதுபோன்ற எந்த தகவலையும் அமைச்சர் நேற்று வெளியிடவில்லை. இந்த அறிக்கைகள் தவறானவை, தவறான தகவல்களை இவை உள்ளடக்கியிருப்பதுடன், உண்மைகளை தெளிவாக திசை திருப்பியுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலிருந்து வெளிவரும் மாணவர்கள் நாடுமுழுவதும் கட்டப்படும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை மேம்படுத்துவார்கள் என்று திரு மாண்டவியா நம்பிக்கை தெரிவித்திருந்தார். தங்களது உயரிய அனுபவத்துடன் தற்போது பணிபுரியும் மருத்துவர்கள் புதிய மருத்துவமனைகளுக்கு வழிகாட்டியாகவும் திகழலாம் என்று கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News