Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாத்த பட டிக்கெட் விலை ரூ.2925 : இணையத்தில் வைரலாகும் பதிவின் உண்மை நிலை!

அண்ணாத்த பட டிக்கெட் விலை ரூ.2925

அண்ணாத்த பட டிக்கெட் விலை ரூ.2925 : இணையத்தில் வைரலாகும் பதிவின்   உண்மை நிலை!
X

MuruganandhamBy : Muruganandham

  |  1 Nov 2021 8:26 AM IST

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2925 எனக் குறிப்பிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதன் உண்மை தன்மை குறித்து, பொய் செய்திகளை ஆய்வு செய்யும் factcrescendoஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையான டிக்கெட்டில் உள்ள Kasi Talkies என்பதை மறைத்தும், Admit 15 என்று உள்ளதை, 1 என்று எடிட் செய்தும் தகவல் பகிர்கின்றனர். மேலும் சிலர், Admit 15 என்பதை, தவறாகப் புரிந்துகொண்டு, ஒரு டிக்கெட் விலை இவ்வளவு, என்றும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர்.





இதனை விமர்சிக்கும் வகையில், டிக்கெட்டில் Admit 15 என குறிப்பிட்டுள்ளதை, சரியாகப் புரிந்துகொள்ளாமல், இயக்குனர் மு.களஞ்சியம், ஒரு டிக்கெட் விலை ரூ.2925 என விமர்சித்து, அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதுதான் மேற்கண்ட வகையில் சர்ச்சை பரவ காரணமாகும். பின்னர் தவறை உணர்ந்து, அந்த ட்வீட்டை மு.களஞ்சியம் நீக்கிவிட்டார்.

15பேருக்கு கொடுக்கப்பட்ட டிக்கெட்டை வேண்டுமென்றே எடிட் செய்து, ஒரு டிக்கெட் விலை ரூ.2925 என்று உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.








.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News