இது ஒலிம்பிக் நடக்கும் இடம் அல்ல! ஓவர் பில்டப் கொடுத்து பக்ரைன் நாட்டு கட்டிடத்தை, தமிழகத்தில் கட்டியதாக பரப்பும் ஊடகங்கள்!

தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை அருகே இடம் கிடைக்காத நிலையில் திருச்சி அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு டிவிட்டர் பதிவில், ஒரு விளையாட்டு மைதானத்தின் புகைப்படம் பகிரப்பட்டு, இது அடுத்த ஒலிம்பிக் நடக்கப்போகும் இடமல்ல! அடுத்த ஆசிய போட்டிகள் நடக்கவிருக்கும் இடமுமல்ல! திருச்சி-தஞ்சாவூர் பைபாஸ்ல் அமையவுள்ள TN Govt விளையாட்டு நகர அமைப்பின் படம் என்று கூறப்பட்டு உள்ளது.
உண்மை என்ன?
இதனை உண்மை என்று ஒன்இந்தியா ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதாரம்: இணைப்பு
ஆனால், அந்த படம் ISA விளையாட்டு நகர அரங்கத்தின் பிளான் ஆகும். அது பக்ரைன் நாட்டில் உள்ளது.
ஆதாரம்: https://www.leighorange.com/project/isa-sports-city-arena-2/
இந்த படத்தை எடுத்து தமிழக விளையாட்டு நகரம் போல சித்தரித்து பரப்பி வருகின்றனர்.