Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா? - உண்மை என்ன?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக மாற்றுவேன் என்று மோடி கூறினாரா? - உண்மை என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2022 1:44 AM GMT

பாஜக ஆட்சிக்கு வந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறினார் என ஒரு சில மீம்கள் பரவி வருகின்றன. அது எந்த அளவுக்கு உண்மை என பார்க்கலாம்.

கடந்த 2014ல் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பாக, காங்கிரஸ் ஆட்சியின் போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சர்வதேச சந்தையில் பலவீனமாக இருந்தது. தற்போது ரூபாய் மதிப்பு சரிந்து இருந்தாலும், சர்வதேச நாணயங்களை ஒப்பிடும் போது ரூபாயின் மதிப்பு வலுவாகவே உள்ளது.

உண்மை என்ன?

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ஆக குறைப்பேன் என்று மோடி எங்கேயும் கூறவில்லை. பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் பிரச்னை, ரூபாய் மதிப்பு பிரச்சனைகளை காங்கிரஸ் அரசு திறம்பட கையாளவில்லை என்றே பிரதமர் கூறி இருந்தார்.

அதேசமயம், மோடி ஆட்சிக்கு வந்தால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 ஆகக் குறையும் என்று கடந்த 2014 காலக்கட்டத்தில், பல்வேறு பொருளாதார ஆய்வறிக்கைகள் வெளியாகின. ஆனால், மோடி நேரடியாக இப்படி எங்கும் கூறவில்லை.

எனவே, மோடி ஆதரவாளர்கள், சில பொருளாதார நிபுணர்கள், ஆய்வறிக்கைகளில் கூறப்பட்ட தகவலை எடுத்து, மோடியே நேரடியாகக் குறிப்பிட்டது போல சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர் என்பதே உண்மை.


Input From: factcrescendo

Next Story
கதிர் தொகுப்பு
Trending News