Kathir News
Begin typing your search above and press return to search.

420க்கும் G-20க்கும் கூடவா வித்தியாசம் தெரியாது? பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் தி.மு.க ஆதரவாளர்கள்!

PM Modi's Complimentary FIFA Jersey Says 'G20', Not '420'

420க்கும் G-20க்கும் கூடவா வித்தியாசம் தெரியாது? பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பும் தி.மு.க ஆதரவாளர்கள்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  11 Dec 2021 1:44 PM GMT

பிரதமர் நரேந்திர மோடிக்கு FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ டி-சர்ட் ஒன்றை பரிசாக அளிக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. ஜியானி வழங்கிய அந்த டி-சர்ட்டில் "மோடி 420" என்று எழுதப்பட்டிருப்பது போல ஒரு புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவை பகிர்ந்துள்ள திமுக ஆதரவாளர்கள், பிரதமருக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து ஆய்வு செய்தபோது, இது வேண்டுமென்றே போலியாக சித்தரிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

உண்மை சரிபார்ப்பு:

பிரதமருக்கு பரிசளித்ததாக கூறப்படும் டி-ஷர்ட் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முடிவில் அது எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை நம்மால் அறிய முடிந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள அர்ஜெண்டினா சென்றிருந்தார். இத்தருணத்தில் FIFA தலைவர் ஜியானி பிரதமர் மோடியை சந்தித்து, "மோடி ஜி-20" என்றே எழுதப்பட்ட டி-சர்ட் ஒன்றை பரிசாக அளித்தார்.அதில் Gஎன்பதற்கு பதிலாக 4என மாற்றி மோசடியாக மாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு, இத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.



மேற்கண்ட நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News