Kathir News
Begin typing your search above and press return to search.

போலி படங்களை பதிவிட்டு வெறுப்பை பரப்பும் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி - வசமாக மாட்டிய இழிவு அரசியல்!

போலி படங்களை பதிவிட்டு வெறுப்பை பரப்பும் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி - வசமாக மாட்டிய இழிவு அரசியல்!

போலி படங்களை பதிவிட்டு வெறுப்பை பரப்பும் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி - வசமாக மாட்டிய இழிவு அரசியல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Feb 2021 1:37 PM IST

அரசியலில் தலைவர்கள் தான் பேசும் வார்த்தைகளில் உள்ள உண்மைதன்மை மற்றும் பரப்பும் செய்திகள், படங்கள் போன்றவற்றின் உண்மை நிலை மற்றும் விவரங்களை சரிவர ஆராய்ந்து வெளியிட வேண்டும். மாறாக ஆளும் அரசின் மீது வன்மத்தை மனதில் வைத்து பொய்யான செய்திகளையும் படங்களையும் மக்கள் மத்தியில் பரப்பி அதன் மூலம் வெறுப்பை தூண்ட நினைக்க கூடாது. இது அந்த அரசியல்வாதி தனக்கு வாக்களித்த மக்களை அவமானபடுத்தியது போன்றதாகும்.

அந்த வகையில் தான் ஒரு எம்.பி என்பதையும் மறந்து தனக்கு மக்கள் வாக்களித்து கவுரவப்படுத்தியுள்ளனர் என்பதையும் மறந்து பொய்யான புகைப்படத்தை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டதன் மூலம் தான் பயணிக்கும் அரசியல் பாதையே பொய் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நிரூபித்துள்ளார்.

தற்பொழுது வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்துவரும் போராட்டத்தை மையமாக வைத்து தனது ட்விட்டர் பதிவில் எம்.பி.ஜோதிமணி இரண்டு படங்களை பதிவிட்டிருந்தார். மேலும் அந்த புகைப்படங்களை இங்குள்ள ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்ற அடைமொழியோடு ஆளும் அரசின் மீது வெறுப்மை வரவழைக்கும் எண்ணத்தோடு பதிவிட்டிருந்தார்.

ஆனால் உண்மையில் அந்ந இரண்டு புகைப்படங்களுமே இருவேறு சம்பவங்களில் எடுக்கப்பட்டவை. ஒன்று கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த போராட்டத்தின் புகைப்படம்.

மற்றொன்று கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி ராஜஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படம்.

ஆக, இரண்டுமே தற்பொழுது நடைபெறும் போராட்டத்தின் புகைப்படம் இல்லை.

ஆனால், ஆளும் மத்திய அரசின் மீது எப்பொழுது வெறுப்பை மக்களுக்கு விதைக்கலாம் என்ற வன்மத்துடன் சுற்றி வரும் எம்.பி.ஜோதிமணி இந்த பழைய புகைப்படங்களை மக்கள் மத்தியில் பொய்யாக பரப்பி வருகிறார். தனக்கு வாக்களித்த மக்களை மதிக்கும் ஓர் அரசியல்வாதி இதுபோல் செயலை செய்ய மாட்டார். மாறாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிக்கு இந்த செயல் மிக இயல்பாக வரும் எம்.பி.ஜோதிமணிக்கு வந்ததை போல்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News