Top
Kathir News
Begin typing your search above and press return to search.

Mr Bean நடிகர் இறந்துவிட்டதாகத் தவறாக வைரல் ஆகும் போலி செய்தி..!

Mr Bean நடிகர் இறந்துவிட்டதாகத் தவறாக வைரல் ஆகும் போலி செய்தி..!

JananiBy : Janani

  |  5 Jun 2021 7:39 AM GMT

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு வைரல் செய்தியாக Mr பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் மே 29 2021 இல் இறந்துவிட்டதாக ஒரு செய்தி பேஸ்புக்கில் வைரலாகி வந்தது. இந்த வைரல் புகைப்படமானது பேஸ்புக்கில் பல்வேறு இடுக்குகளில் பகிரப்பட்டுள்ளது.


இருப்பினும் இந்த வைரல் செய்தியானது போலியானது ஆகும். PBJ நிர்வாகம் அட்கின்சன் இறந்து விட்டதாகக் கூறிய செய்தியை மறுத்துள்ளது. மேலும் அது, "அவர் உயிருடன் உள்ளார்," என்று PBJ நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் ஜூன் 1 2021 இல்'தெரிவித்தார்.

பேஸ்புக்கில் இந்த இடுகை பதிவிட்ட பக்கம் அதிகாரப்பூர்வ Mr பீன் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் சேனல் இல்லை. அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமும் சரிபார்க்கப் பட்டுள்ளது. இந்த அதிர்ப்பூர்வ Mr பீன் பக்கம் 2008 ஏப்ரல் 13 தொடங்கப்பட்டது.

இந்த போலி செய்தியானது 2012 முதல் பலமுறை பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை இதுகுறித்த எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.


எனவே ரோவன் அட்கின்சன் மே 29 2021 இல் இறந்துவிட்டதாக வைரலாகும் செய்தி போலியானது மற்றும் தவறான செய்தியாகும்.

Source: நியூஸ் மீட்டர்

Next Story