Kathir News
Begin typing your search above and press return to search.

FactCheck: மும்பை விமானநிலையத்திற்கு அதானி பெயர் சூட்டப்பட்டதா?

ஆகஸ்ட் 2 ம் தேதியன்று மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMISA) நிலத்தடி தோட்டத்திற்குள் நுழைந்த சிவ சேனா தொண்டர்கள்,

FactCheck: மும்பை விமானநிலையத்திற்கு அதானி பெயர் சூட்டப்பட்டதா?
X

Saffron MomBy : Saffron Mom

  |  6 Aug 2021 12:15 AM GMT

ஆகஸ்ட் 2 ம் தேதியன்று மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMISA) நிலத்தடி தோட்டத்திற்குள் நுழைந்த சிவ சேனா தொண்டர்கள், அங்கிருந்த அதானி பலகையை பிடுங்கி காவி கொடிகளை நட்டனர். சிவசேனா கட்சியின் தொழிலாளர் பிரிவான பாரதீய கம்கர் சேனாவின் உறுப்பினர்கள் "சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜெய் ஹோ" போன்ற கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டக்காரர்கள், CSMIAவின் பெயரை திடீரென 'சத்ரபதி சிவாஜி' பெயரிலிருந்து மற்றும் அதானி குழுமத்தின் பெயருக்கு 'மாற்றுவதை' எதிர்ப்பதாகக் கூறினர்.

இது சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதிப்பதாக சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் கூறினார். அவர் மேலும், "விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம். அவர்கள் 'அதானி விமான நிலையம்' என்று மாற்றி எழுதினார்கள். நீங்கள் அதை வாங்கினீர்களா? சிவாஜி மகாராஜ் நாட்டின் பெருமை" என்று கூறினார்.

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அதானி குழுமத்தினர், விமான நிலையத்தை நிர்வாகம் செய்த GVK குழுமத்திடமிருந்து பிராண்டிங்கை மட்டுமே அதானி பெயருக்கு மாற்றியது என்றும் CSMIA விமான நிலையத்தின் பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறினர்.

CSMIAவில் உள்ள பிராண்டிங் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது. அதானி குழுமம் விமான போக்குவரத்து சமூகத்தின் நலன் கருதி அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து பின்பற்றும் "என்று அதானி விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறினார்.



மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை அதானி குழுமம் GVK குழுமத்திடம் இருந்து எடுத்துள்ளதே தவிர, மும்பை விமான நிலையத்தை அதானி குழுமம் வாங்கிவிடவில்லை.

ஜூலை 13, 2021 அன்று, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை அதானி குழுமம் எடுத்துக்கொண்டதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 74% பங்குகளை வாங்கிய பிறகு, விமான நிலையத்தின் நிர்வாகத்தை GVK குழுமத்தின் கட்டுப்பாட்டிலிருந்து அதானி குழு கைப்பற்றியுள்ளது.

அதானி குழுமத்திற்கு முன்பு, தனியாருக்குச் சொந்தமான இந்தியக் கூட்டமைப்பான GVK குழு 2006 முதல் CSMIAவின் நிர்வாகத்தைக் கையாண்டது.

காங்கிரஸ் போன்ற எதிர்க் கட்சிகள் மோடி அரசை பழிவாங்கும் விதத்தில் அதானி குழு பற்றி பொய்களை பரப்புகின்றன. இத்தகைய போலி செய்திகள் நிஜ வாழ்க்கையில் வன்முறையில் முடிவடைகிறது.

Cover Image Courtesy: Lokmat News English

Next Story
கதிர் தொகுப்பு
Trending News