Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்றாரா முதல்வர்?

இந்துக்களின் வாக்கு பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்றாரா முதல்வர்?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Sept 2023 9:26 AM IST

இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிபட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குபெறும் அளவுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்து விடவில்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்லியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.


இதில் 2019 பிப்ரவரி 13, மதியம் 2 மணிக்கு நியூஸ் 7 தமிழில் செய்தி வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்த செய்தி வெளியாகி இருந்தது. ஸ்டாலின் சொன்னதாக வெளியான செய்தி இல்லை.




இதை எடிட் செய்தே மேற்கண்ட போலி செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 ஊடகமும் பரவி வரும் தகவல் பொய் என்பதை உறுதி செய்துள்ளது.









Next Story
கதிர் தொகுப்பு
Trending News