கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததாகப் பரவும் தவறான தகவல்!
By : Kathir Webdesk
கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோவில் உள்ள நபர், WSO உடன் இணைந்து, குற்றவியல் சட்டத்தில் உள்ள பட்டியல் விதிகளின் கீழ் ஆர்எஸ்எஸ் அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். அதன் பிரதிநிதிகளை கனடாவில் இருந்து அகற்ற வேண்டும் என கூறுகிறார்.
கனேடிய முஸ்லீம்களின் தேசிய கவுன்சில்(NCCM) எனும் அமைப்பின் நிர்வாக அதிகாரி கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புடன் இணைந்து வெளியிட்ட கோரிக்கையை கனடா அரசு வெளியிட்டதாகத் தவறாகப் பரப்பி உள்ளனர்.
இதன் மூலம் கனடா அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது. வீடியோவில் பேசும் நபர் கனேடிய முஸ்லீம்களின் தேசிய கவுன்சில் நிர்வாக அதிகாரி. கனடா அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையே அவர்கள் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.