பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அடித்து உடைத்த மக்கள் என்று பரவும் வீடியோ!
By : Kathir Webdesk
பெங்களூருவில் இலவச பஸ் நிற்காததால் அதை மக்கள் அடித்து உடைத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் “விழாக்கோலம் பூண்டது பெங்களூர். இலவசம் எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதற்கான ஒரு உதாரணம் கர்நாடகாவில்.. இலவச பேருந்து நிறுத்தவில்லை என்ற காரணத்தால்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை என்ன?
வீடியோவில் உள்ள பேருந்தின் எண் GJ என்று ஆரம்பிப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. இதன் மூலம் இந்த பஸ் பெங்களூருவை சார்ந்தது இல்லை, குஜராத்தைச் சார்ந்தது என்பது தெளிவாகிறது. ஜிஜே 05 என்ற பதிவு எந்த நகரத்தைச் சார்ந்தது என்று தேடிப் பார்த்த போது, அது குஜராத் மாநிலம் சூரத்தைச் சார்ந்தது என்பது தெரியவருகிறது. இந்த சம்பவம் சூரத்தின் Nanpura என்ற பகுதியில் நடந்தது என்பது உறுதியானது.
கர்நாடகத்தில் இலவச பஸ் நிற்காததால் அதை தாக்கிய மக்கள் என்று பரவும் வீடியோ 2019ல் சூரத்தில் நடந்த ஒரு கலவரத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.