அமர்தியா சென் காலமானார் என பரவிய வதந்தி - முந்திக்கொண்டு பொய் பரப்பிய தமிழ் ஊடகங்கள்!
By : Kathir Webdesk
பொருளாதார நிபுணர் அமர்தியா சென் காலமானார் என்று தமிழ் ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் மரணம் என்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. NewsTamil என்ற ஊடகம் 2023 அக்டோபர் 10ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
அமர்தியா சென் காலமானார் என்று பரவும் தகவல் தவறானது என்று அவரது மகள் உறுதி செய்துள்ளார். அவரது மகள் வெளியிட்ட பதிவில், “நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி. இது பொய்யான செய்தி: பாபா (அப்பா) நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான வாரத்தை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம். நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அவரது அணைப்பு எப்போதும் போல் வலுவாக இருந்தது. அவர் ஹார்வர்டில் வாரத்திற்கு 2 வகுப்புகளை எடுக்கிறார்.எப்போதும் போல் மும்முரமாக இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அமர்தியா சென் மரணம் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.