Kathir News
Begin typing your search above and press return to search.

ராணுவ வீரர் இறப்பில் அரசியல் செய்யும் ராகுல் காந்தி: நேரம் பார்த்து திரிக்கப்படும் அரசின் திட்டம்!

ராணுவ வீரர் இறப்பில் அரசியல் செய்யும் ராகுல் காந்தி: நேரம் பார்த்து திரிக்கப்படும் அரசின் திட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Oct 2023 1:30 AM GMT

அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அக்னிவீரர் அக்‌ஷய் லட்சுமன் அக்டோபர் 22ல் இறந்தார். உலகின் மிக உயர்ந்த இராணுவ எல்லைப்பகுதியான சியாச்சின் மலைப்பகுதியில் வீரமரணம் அடைந்தார்.

இவரது இறப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “ஒரு வீரர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அவருக்கு கருணைத் தொகை இல்லை, வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியமும் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டமே அக்னிவீரர் திட்டம்” என்று கூறியுள்ளார்.

உண்மை என்ன?

அக்னிவீரர் அக்‌ஷய் லட்சுமன் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு அக்னிவீர் திட்டம் மூலம் அரசாங்கத்தின் பங்களிப்புகள், மீதமுள்ள பதவிக்காலத்திற்கான ஊதியம் மற்றும் ஆயுதப் படைகளின் போர் விபத்து நிதியிலிருந்து பங்களிப்புகள் ஆகியவை சேர்த்து ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பங்களிப்பற்ற காப்பீடாக ரூ. 48 லட்சமும், கருணைத் தொகையாக ரூ. 44 லட்சமும், மீதித்தொகை சேவை நிதி மற்றும் அக்னிவீரர் நிதித் தொகுப்பிலிருந்தும் வழங்கப்படவுள்ளது.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News