இஸ்ரேலிய பொருட்களை புறக்கணியுங்கள் என பரவும் வதந்தி: உண்மை என்ன?
By : Kathir Webdesk
இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிக்க எளிதான வழி. பார்கோடு எண் 729 இல் தொடங்கினால், அதை இஸ்ரேலிய தயாரிப்பாகக் கருதுங்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கேஎஃப்சி (KFC), மெக்டோனால்ட்ஸ் (McDonalds), நைக் (Nike), அடிடாஸ் (Adidas), டாம்மி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger), கூச்சி (Gucci), கிட்கேட் (KitKat), மேகி (Maggi), ஓரியோ (Oreo), லேய்ஸ் (Lays), ஸ்டார்பக்ஸ் (Starbucks), கோக்க-கோலா (Coca-Cola), ரெட்புல் (Red Bull), பெப்சி (Pepsi), ஸ்ப்ரைட் (Sprite), மோட்டரோலா (Motorola), ஹச்பி (HP), நெஸ்லே (Nestle), ரெவ்லான் (Revlon) மற்றும் டவ் (Dove) போன்ற பொருட்கள் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்கோடுகள் என்பது இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில், குறிப்பிடத்தக்க தரவுகளைக் கொண்டு சேமிக்கப்பட்ட ஒரு குறியீடாகும். பார்கோடுகளில் உள்ள 729 என்ற எண் எதைக் குறிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ததில் 729 என்பது இஸ்ரேலைக் குறிக்கின்றது. ஆனால் ஒரு பொருளைத் தயாரிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் நாட்டை அது குறிப்பதில்லை. இது அந்த நிறுவனங்கள் பதிவுசெய்துள்ள உறுப்பு நாடுகளையே குறிக்கின்றன. இதன்மூலம் பரவி வரும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது.