அண்ணாமலை துப்பாக்கி சுட திணறியதாக தி.மு.க ஐடி விங் பரப்பும் வீடியோ: உண்மையில் என்ன நடந்தது?
By : Kathir Webdesk
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் துறையில் பணியாற்றிய போது துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர்களிடம் துப்பாக்கி பயன்படுத்தும் முறை பற்றி கேள்வி எழுப்பினார். அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறியது போன்று செய்தி வெளியானது. ஆனால், அந்த அதிகாரிகள் சரியாகத்தான் துப்பாக்கியை கையாண்டனர் என்று பின்னர் உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. அந்த வீடியோவை எடுத்து அண்ணாமலைக்கு அசிங்கமாகப் போய்விட்டது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் இருப்பது அண்ணாமலை இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.
இந்த சம்பவம் 2022 டிசம்பரில் நடந்தது. ஆனால், அண்ணாமலை 2019ம் ஆண்டிலேயே ஐபிஎஸ் பணியிலிருந்து விலகினார். இதன் மூலம் வீடியோவில் இருப்பது அண்ணாமலை இல்லை என்பது உறுதியாக தெரிகிறது.