குப்பை நகரம் என்று பெயர் வாங்கியதா வாரணாசி? இட்டுக்கட்டி பரப்பும் திமுக ஐடி விங்!
By : Kathir Webdesk
உலகத்தின் மிகவும் படு கேவலமான குப்பை நகரம் என்று பெயர் வாங்கிய வாரணாசி. நரேந்திர மோடியின் சொந்த தொகுதி. அவர் குப்பை பொறுக்க வேண்டியது அங்கேதான் என்ற பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பிரதமர் மோடி போட்டியிட்டு வென்ற வாரணாசி தொகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இறந்தவர்களுக்கு திதி கொடுக்க என பல சடங்குகள் அங்கே நடக்கும். இதற்கு முந்தைய காலங்களில் மக்கள் கூட்டத்தால் வாரணாசியின் சில பகுதிகளில் குப்பை நிறைந்து காணப்பட்டது. ஆனால் இப்போது நகரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குப்பை கொட்டுபவர்களை அரசு கண்காணிக்கிறது. தெருக்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்படும் என்று வாரணாசி மாநகராட்சி அறிவித்துள்ளது. மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு அபராதம் ரூ.1,00,000 வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை மேலாண்மை செய்வதில் வாரணாசி சிறப்பாக செயல்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வருவது போல வாரணாசி உலகின் குப்பை நகரம் கிடையாது. Global Waste Index 2022ன் படி அமெரிக்க நகரங்களில் தான் அதிக அளவில் குப்பை உற்பத்தி ஆகிறது.
https://sensoneo.com/global-waste-index/
அதுமட்டுமல்லாது பிரதமர் மோடியை தொகுதியை தவறாக சித்தரித்து பரவி வரும் புகைப்படம் 2011ல் எடுக்கப்பட்டது. அகமதாபாத், சபர்மதி ஆற்றில் எடுக்கப்பட்ட படத்தை வாரணாசி எடுத்ததாக பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகிறது.
https://pictures.reuters.com/archive/INDIA-GM1E79C1ATQ01.html