Kathir News
Begin typing your search above and press return to search.

போர் விமானத்தில் பறக்கும் போது பிரதமர் மோடி வானை நோக்கி கை அசைத்ததாக பரவும் பொய்!

போர் விமானத்தில் பறக்கும் போது பிரதமர் மோடி வானை  நோக்கி கை அசைத்ததாக பரவும் பொய்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2023 1:05 AM GMT

"தேஜஸ் போர் விமானத்தில் மேகங்களுக்கு மேல் பறந்த போது டாட்டா காட்டிய மோடி" என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்யும் பொழுது, நடுவானில் இருந்தபடியே அங்கிருந்து கை அசைத்துக் கொண்டே பயணம் செய்வது போன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதை சிலர் நடுவானில் யாரும் இல்லாதபொழுதும் கூட மோடி கையசைத்து பயணம் செய்கிறார் பாருங்கள் என்று கூறி பதிவு செய்துள்ளதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?

பிரதமர் அலுவலகம் முழு வீடியோவை வெளியிட்டுள்ளது. மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே, அவர் பயணம் செய்த விமானத்தைத் தவிர்த்து, மற்றொரு தேஜஸ் போர் விமானமும் வானில் பயணம் செய்வதைக் காண முடிந்தது. எனவே அந்த மற்றொரு போர் விமானத்தை பார்த்தே, இந்த விமானத்தில் இருந்த கேப்டனும், பயணம் செய்த பிரதமர் மோடியும் கை அசைத்துள்ளனர் என்பது உறுதியாகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News