Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்திய உப்பில் சயனைடு உயிர்க்கொல்லி" என அமெரிக்க ஆய்வு தெரிவித்ததாக பரவும் வதந்தி !

இந்திய உப்பில் சயனைடு உயிர்க்கொல்லி என அமெரிக்க ஆய்வு தெரிவித்ததாக பரவும் வதந்தி !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2023 1:24 AM GMT

எச்சரிக்கை: உப்பு எனும் உயிர்க்கொல்லி! இந்தியாவில் அயோடின் கலந்த உப்புகள் என்ற பெயரில் விற்கப்படும் டாடா , அண்ணபூர்ணா மற்றும் பல பிரண்ட்டட் உப்புகளை ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தரும் ரிப்போர்ட் ஒன்றைத் தந்திருக்கிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

இந்த தகவல் கடந்த 2019ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வைரல் செய்யப்படும் பதிவு அயோடின் கலந்து உப்பிற்கு எதிராக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 167 மில்லியன் மக்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான அளவு அயோடின் பெறவில்லை என்றால், அவர்களது குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் பிறக்கலாம், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு, இறப்பு விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உப்பில் உள்ள பொட்டாசியம் ஃபெரோசயனைட்டின் அளவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதன் படி, உப்பில் அனுமதிக்கப்பட்ட பொட்டாசியம் ஃபெரோசயனைடின் அளவு 10 மி.கி/கி.கி. இது டாடா உப்பில் 1.90 மி.கி/கிலோ என்ற அளவிலும், சம்பார் உப்பில் சுமார் 4.71 மி.கி/கி.கி என்ற அளவிலுமே உள்ளது.

இவை இரண்டும் அனுமதிக்கப்பட்ட அளவுகளே என்பது குறித்து CSIR இன் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் அரவிந்த் குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் சமூக ஊடகங்களில் பரவு வரும் பதிவு பொய் என தெரிய வருகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News