தமிழக அரசின் புயல் மீட்பு பணிகளை ஆங்கில நாளிதழ்கள் பாராட்டியதா? சொல்கிறது கலைஞர் செய்திகள்!
By : Kathir Webdesk
"மிக்ஜாம் மீட்புப்பணிகள் - தமிழ்நாடு அரசுக்கு நாளிதழ்கள் பாராட்டு!" என கலைஞர் செய்திகள் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி உள்ளது.
உண்மை என்ன?
இந்து நாளிதழில் சென்னை புயல் மீட்பு பணிகள் குறித்து எந்த விவரமும் இல்லை. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து தண்ணீர் எப்படி வெளியற்றப்பட்டது என்பது குறித்தே விளக்கமாக கூறப்பட்டுள்ளது. புயலுக்கு முந்தைய தகவல் தான் உள்ளதே தவிர, மீட்பு பணி பற்றி எதுவும் குறிபிடப்படவில்லை. ஆனால் புயல் மீட்பு பணிகளுக்கு, ஆங்கில நாளிதழ்கள் பாராட்டு என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. திமுக அரசு மீட்பு பணிகளில் சொதப்பியதால் சென்னை மேயர் பிரியாவின் சொந்த தொகுதியில், அவரது வீட்டுக்கே சென்று பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்னும் இறப்பு விவரம் முழுமையாக வெளியாகவில்லை. யாருமே எங்களை எட்டி பார்க்கவில்லை என வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வெளிப்படையாக பேட்டி கொடுக்கின்றனர். கள சூழல் இப்படி இருக்கும் வேளையில், மீட்பு பணிகள் பற்றி ஆங்கில நாளிதழ் பாராட்டி உள்ளதாக கலைஞர் செய்திகள் வெளியிட்ட தகவல் ஒரு தலைபட்சமாக உள்ளது.