மீட்பு பணி ஹெலிகாப்டருக்கு வாடகை கொடுக்கணுமா? வதந்தி கிளப்பி விடும் திமுக தரப்பு!
By : Kathir Webdesk
2019ல் கேரளாவில் கனமழை பெய்தது. அப்போது மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவதற்காக ரூ.102 கோடிக்கான பில்லை கேரள அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை தற்போது பகிர்ந்து வரும் திமுக ஆதரவாளர்கள். உண்மை புரியாமல் திரித்து, மத்திய அரசின் மீட்பு பணிக்கு கட்டணமா என கேட்கின்றனர்.
உண்மை என்ன?
கேரளா வெள்ளத்தின் போது பயன்படுத்தப்பட்ட இந்திய இராணுவ ஹெலிகாப்டருக்கு உண்மையில் பணம் செலுத்துவது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தான். மாநில அரசிடம் கணக்கை ஒப்படைத்த பின் மத்திய உள்துறை அமைச்சகம் பணம் செலுத்துவது தான் நடைமுறை. அந்த செய்திகுறிப்பிலே இதுகுறித்து இருக்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்ட மசோதாக்கள் மாநில அரசாங்கத்தால் உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டால், அதற்கான தொகையை மத்திய அரசே கொடுத்துவிடும். இது புரியாமல் திமுகவினர் வீண் புரளி கிளப்பி விடுகின்றனர்.