Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கழிப்பறை என பரவும் வீடியோ: உண்மை என்ன?

அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திறந்தவெளி கழிப்பறை என பரவும் வீடியோ: உண்மை என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Jan 2024 2:54 AM GMT

ஜனவரி 22ல் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக வரும் பக்தர்களுக்காக அதிநவீன வசதிகளுடன் செய்யப்பட்டுள்ள கழிப்பறையைப் பாருங்கள் என்று கூறி திறந்தநிலையில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை காட்டும் வீடியோ ஒன்றை திமுகவினர் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

இந்த வீடியோ அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல. இந்த கழிப்பறைகள் வாரணாசியில் உள்ள ஸ்வர்வேத மஹாமந்திர் தாம் கோவிலின் திறப்பு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் திரளும் இடத்தில் அமைக்கப்படும் தற்காலிக கழிப்பறைகள் தார்ப்பாயை பயன்படுத்தி மறைக்கப்படுவதற்கு முன்பே எடுக்கப்பட்ட வீடியோவை அயோத்தியில் எடுக்கப்பட்டதாக கூறி பரப்பி வருகின்றனர்.









Next Story
கதிர் தொகுப்பு
Trending News