எதுக்குமே தேறாதா உலக முதலீட்டாளர்கள் மாநாடு: திமுகவினர் சொல்வது என்ன?
By : Kathir Webdesk
உலக முதலீட்டாளர் மாநாடு துவங்கிய முதல் நாளில் 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கு எட்டப்பட்டு உள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. ஆனால் திமுகவினர் எதிர்பார்த்த அளவுக்கு முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெறவில்லை.
என்ன நடந்தது?
ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் ₹80,254 கோடி முதலீடு செய்வதாக ஒப்பந்தம் போட்டுள்ளதாக சொல்லபடுகிறது. அதில் அம்பானி மட்டும் ₹35,000 கோடி, வியட்நாமை சேர்ந்த கம்பெனி VinFast ₹4,000 கோடி செய்வதாக கூறப்படுகிறது. அதையும் திமுக ஐடி விங் ₹16,000 கோடி என திரித்து சொல்கிறது. VinFast நிறுவனம் தவிர மற்ற நிறுவனங்கள் எல்லாமே தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருபவை. அவை தங்களுடைய நிறுவனத்தை தமிழகத்தில் விரிவாக்கம் செய்யப்போவதாக தான் அறிவித்து உள்ளனரே தவிர, இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அடுத்து வியட்நாமின் VinFast நிறுவனம் சுமார் ₹16,000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யபோவதாக சொன்னார்கள். அதுவும் ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள தூத்துகுடியில் தொடங்க போவதாக முதல்வரே அறிவித்தார்.
அந்த நிறுவனமே எப்பொழுது வேண்டுமானாலும் திவாலாகும் நிலையில் உள்ளது. இந்தியாவின் டாடா நிறுவனம் மாதம் 14,000 மின்சார கார்கள் விற்பனை செய்கிறது.-. Tesla நிறுவனம் மாதம் 1,50,000 கார்கள் விற்பனை செய்கிறது
ஆனால் VinFast மாதம் வெறும் 1070 கார்கள்தான் விற்பனை செய்கிறது அதிலும் 650 கார்களை VinGroupன் டாக்சி நிறுவனம் GreenSM மட்டுமே வாங்கி கொள்கிறது. மாதம் வெறும் 420 கார்களை பொதுமக்களுக்கு விற்கும் மிகச்சிறிய நிறுவனம்தான் VinFast. முதல்வர் VinFast ₹16,000 கோடி முதலீடு செய்வதாக சொல்கிறார். ஆனால் அந்த நிறுவனமோ அடுத்த 5 ஆண்டுகளில் அதிகபட்சம் ₹4,000 கோடி மட்டுமே முதலீடு செய்வதாக அறிக்கை கொடுத்துள்ளது. அமெரிக்கா பங்குசந்தையில் இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் 81% வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.