Begin typing your search above and press return to search.
விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என அரவிந்த்சாமி கூறினாரா?

By :
விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி கூறியதாக ’மாலை மலர்’ நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
அரவிந்த்சாமி 5 வருடங்களுக்கு முன் பேசியதின் ஒரு வாக்கியத்தை மட்டும் மாலை மலர் நியூஸ் கார்டாக வெளியிட்டுள்ளது. ”நான் ரஜினி சாரின் பெரிய ரசிகன், கமல் சாரின் பெரிய ரசிகன் அல்லது எனக்கு விஜய் பிடிக்குமென ஓட்டுப் போடக் கூடாது. நான் ஓட்டுப் போடக் கூடாது. மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என நான் சொல்லவில்லை. நான் ஓட்டுப் போடக் கூடாது. போடவும் மாட்டேன். நீங்கள் சொல்லும் விஷயத்தில் மாற்றம் வரப் போகிறதா? அது உங்களால் முடியுமா? உங்கள் நல்ல எண்ணம் அல்லது நோக்கம் முதலில் என்னை வந்து சேர வேண்டும். பிறகுதான் அதைப் பற்றி நான் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்.
Next Story