குல தொழிலை செய்ய வைக்கிறதா மத்திய அரசு? அப்படியே உல்டாவாக மாற்றிய திமுக!
By : Kathir Webdesk
பரவி வரும் தகவல்
உண்மை என்ன?
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கைவினை கலைகளில், தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது குடும்பம் மேம்படும் வகையிலும் அந்த தொழில் அழிந்துவிடாமலும் இருக்க மத்திய அரசே நேரடியாக உதவி புரியும் நோக்கில் இந்த விஸ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 18 வகையான கைவினை தொழில் செய்யும் கலைஞர்களுக்கு உதவிகள் சென்று சேரும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் பயனாளர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். மேலும், இந்த கைவினைத்தொழில்களில் ஈடுபடுவோரின் குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது தொழில் செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு கருவிகள் வாங்க உதவித்தொகை ரூ.15,000 கடன் உதவி, சான்றிதழ் என அனைத்தும் வழங்கப்படும் என திட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறைந்தபட்ச தகுதி 18 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அதை வைத்து குலத்தொழிலை மத்திய அரசு ஊக்குவிப்பதாக திமுகவினர் பொய்யாக திரித்து உருட்டி வருகின்றனர். ஒரு பக்கம் இப்படி மத்திய அரசு திட்டத்தை குறை சொல்லும் நிலையில் இங்கே திமுக அரசு அதே திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி வேறு பெயரில் அறிவித்துள்ளது.
திமுக அரசு மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை பிரதி எடுத்து அப்படியே ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு 35 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்கின்ற ஒரு மாற்றத்தை மட்டும் செய்துவிட்டு தமிழக கைவினைஞர் மேம்பாட்டு திட்டம் என்று கொண்டு வந்துள்ளது. இந்த விபரங்கள் வெளியே தெரிந்துவிடாமல் இருக்க வயது வரம்பை வைத்து குலத்தொழில் என்று மத்திய அரசு திட்டத்தை விமர்சிக்கின்றனர் திமுகவினர்.
18 வயதிலேயே ஒருவர் ஒரு கலையை கற்றுக்கொண்டு அதன் மூலம் சிறந்த ஒரு கலைஞர் ஆக வருவது சரியாக இருக்குமா? அல்லது 35 வயதில் ஒருவர் ஒரு கைவினை கலையை கற்று அந்த தொழிலை செய்து சிறந்து விளங்க முடியுமா? இரண்டில் எதனை செய்தால் சிறந்து விளங்க முடியும்? மக்கள் முடிவுக்கே விடப்படுகிறது.